Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
பக்தருக்கும் ப்ரபந்நருக்கும் உபாய உபேயங்கள் பயன்படும் விதம்
மூலம் - ப்ராப்திரூபமான இவ்வநுபவத்தினுடைய பரீவாஹமாய்க் கொண்டு கைங்கர்யம் உபேயம். இவ்வுபாயரூபமாயும் ப்ராப்திரூபமாயுமிருக்கிற ஜ்ஞானத்துக்கு விஷயமாய்க் கொண்டு பலப்ரதந்த்வ போக்யத்வாதிவேஷத்தாலே ஈச்வரனுக்கு உபாயத்வமும் உபேயத்வமும்.
– எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யம் என்பதும் அடையும் பேறாக, அடையப்பட வேண்டிய இலக்காக (உபேயம்) உள்ளது. ஞானத்துக்கு விஷயமாக உள்ள ஸர்வேச்வரனே உபாயமாகவும், உபேயமாகவும் உள்ளான். அனைத்துவிதமான பலன்களையும் அளிப்பதால் உபாயமாகவும், அனுபவிக்கவேண்டிய வஸ்துவாக உள்ளதால் உபேயமாகவும் உள்ளான்.