Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
உபாய: ஸ்வப்ராப்தே: உபநிஷத் அதீத: ஸ பகவாந் ப்ரஸத்த்யை தஸ்ய உக்தே ப்ரபதந நிதித்யாஸந கதீ ததாரோஹ: பும்ஸ: ஸுக்ருத பரிபாகேண மஹதா நிதாநம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா:
– எம்பெருமானை அடையும் உபாயம் எம்பெருமானே என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன. அவனது அனுக்ரஹத்தைப் பெறும் மார்க்கங்களாகப் பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகிய இரண்டும் கூறப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பக்தி மற்றும் ப்ரபத்தி மார்க்கங்களில் ஒருவன் ஈடுபடுவதற்கு, அவனுடைய பூர்வகர்ம புண்ணியமே காரணமாக உள்ளது. ஆயினும், அனைத்தையும் படைக்கவல்ல எம்பெருமானே காரணமாக உள்ளான்.