Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 15)
அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்
ப்ரபந்நாதந்யேஷாம் ந திசதி முகுந்தோ நிஜபதம் ப்ரபந்நாச்ச த்வேதா ஸுசரித பரீபாக பிதாய விளம்பேந ப்ராப்திர் பஜநஸுகமேகஸ்ய விபுலம் பரஸ்யாஸு ப்ராப்தி: பரிமிதரஸா ஜீவிததசா
– ப்ரபந்நர்களைக் காட்டிலும் வேறு யாருக்கும் முகுந்தன் தனது திருவடிகளை அளிப்பதில்லை. ப்ரபந்நர்களில் இருவகை உண்டு – மோக்ஷம் பெறுவதற்காகப் ப்ரபத்தி செய்தல், பக்தி அல்லது உபாஸனை கிட்டுவதற்காகப் ப்ரபத்தி செய்தல் என்பதாகும். இது அவர்கள் முற்பிறவி புண்ணியங்களால் மாறுபடுகிறது. பக்தனுக்கு உண்டாகும் மோக்ஷம் என்பது தாமதமாகவே உண்டாகும். ஆனால் அவனுக்குப் பக்தி மூலமாகக் கிட்டும் பகவத் அனுபவம் இந்த உலகில் நீண்ட நாட்கள் நீடிக்கும். மற்றவனுக்கு மோக்ஷம் என்பது உடனடியாகக் கிட்டும். ஆனால் உயிருடன் உள்ள காலம் என்பது குறைவாக உள்ளதால், கைங்கர்ய இன்பமும் குறைவாகவே இருக்கும்.