Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்
வேண்டும் பெரும்பயன் வீடு என்று அறிந்து விதிவகையால் நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு ஏற்கும் என்பர் மூண்டு ஒன்றில் மூலவினை மாற்றுதலில் முகுந்தன் அடி பூண்டு அன்றி மற்றோர் புகல் ஒன்று இலை என நின்றனரே
– பகவத் அனுபவத்தில் திளைக்க வேண்டும் என்னும் ஆசை உள்ளவர்கள் வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள் மோக்ஷம் என்றும், அதனை அடைய இரண்டு உபாயங்கள் உள்ளன என்றும், தாங்கள் செய்த புண்ணிய பலன் காரணமாக நீண்ட காலம் கழித்து பலன் தரும் உபாயம் மற்றும் உடனடியாக பலன் தரும் உபாயம் இவையே என்றும் அறிகின்றனர். இந்த இரண்டில் ஒன்றைப் பின்பற்ற எண்ணுகின்றனர். இவற்றுக்குத் தடையாக உள்ள தங்களது முன்வினை கர்ம பலன்களை நீக்குவதற்கு, முகுந்தனாகிய எம்பெருமானின் திருவடிகளைப் பற்றுதலே வழி என்றும், வேறு உபாயம் இல்லை என்றும் அறிகின்றனர்.