Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 12)

அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்

ப்ரபந்நன் சிறந்தவன்

மூலம் - இதில் அசேஷ அதநாசநம் என்கையாலும், ஆதரம் தோற்றத் தாவத் என்று அதிகாரம் தோறும் ஆவர்த்திக்கையாலும் இவன் அபேக்ஷித்த பலமெல்லாம் இவன் கோலின காலத்திலே யதாமநோரதம் ஸித்திக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தை நினைத்து “ஸத்கர்ம நிரதா: சுத்தா: ஸாங்க்ய யோக விதஸ்ததா | நார்ஹந்தி சரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி” என்று சொல்லுகிறது.

– ஆக “அனைத்து பாவங்களையும் நீக்கும்” என்று கூறப்படுவதாலும், “ப்ரபத்தி வரை” என்று பல இடங்களிலும் மீண்டும் மீண்டும் கூறப்படுவதாலும், ப்ரபத்தி செய்தவன் விரும்புகின்ற அனைத்தும் அவன் நினைத்த நேரத்திலேயே கிட்டிவிடும். இவனுக்கு இப்படிப்பட்ட மேன்மை உள்ளது என்பது லக்ஷ்மீ தந்த்ரத்தில் (16-62) - ஸத்கர்ம நிரதா: சுத்தா: ஸாங்க்ய யோக விதஸ்ததா நார்ஹந்தி சரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி – ஞான யோகத்தைக் கைக்கொண்டவர்கள், பக்தி யோகத்தைக் கைக்கொண்டவர்கள், ஆத்மாத் தூய்மைப்படுத்தவல்ல கர்மங்களை செய்பவர்கள் ஆகிய பலரும் ப்ரபத்தி செய்தவன் பெறுவதில் கோடியில் ஒரு பங்கைக் கூடப் பெறத் தகுதியானவர்கள் அல்லர் – என்றது.