Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 11)

அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்

பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகிய இரண்டும் அனைத்தும் அளிக்கும்

மூலம் - “வரம் வரய தஸ்மாத்த்வம் யதாபிமதமாத்மந: | ஸர்வம் ஸம்பத்ஸ்யதே பும்ஸாம் மயி த்ருஷ்டிபதம் கதே”, “கிம் வா ஸர்வ ஜகத் ஸ்ரஷ்ட: ப்ரஸந்நே த்வயி துர்லபம்”, “தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்யம்”, “கிம் லோகே ததிஹ பரத்ர சாஸ்தி பும்ஸாம் யத்விஷ்ணு ப்ரவண தியாம் ந தால்ப்ய ஸாத்யம்”, “பலமத உபபத்தே:” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வேச்வரன் ஸகலபலப்ரதனாகையாலே அவன் திருவடிகளிலே ப்ரபத்தி ஸகலபல ஸாதநமாகையால் இவ்வதிகாரிகள் இருவருக்கும் இது யதாபிமதபல ஹேதுவாயிற்று. “சதுர்விதா பஜந்தே மாம்” என்கிறபடியே உபாஸநம் யாதொருபடி சதுர்வித பலத்துக்கும் ஸாதநமாயிருக்கிறது. அப்படியே “தாவதார்த்திஸ்ததா வாஞ்சா தாவந்மோஹஸ்ததா அஸுகம் | யாவந்ந யாதி சரணம் த்வாமசேஷாதநாசநம்” என்கிறபடியே ப்ரபத்தியும் இச்சதுர்வித பலத்துக்கும் ஸாதநமாகவிறே மஹர்ஷிகள் அறுதியிடுவது.

– ஸர்வேச்வரன் அனைத்தும் அளிப்பவனாக உள்ளதாலும், அவனது திருவடிகளில் செய்யப்பட்ட ப்ரபத்தி என்பது அனைத்தையும் அளிக்கவல்லதாக உள்ளதாலும், இத்தகைய ப்ரபத்தி என்பதே பக்தன், ப்ரபந்நன் ஆகிய இருவருக்கும், அவர்கள் விரும்பியதை அளிப்பதாக உள்ளது. இதனைக் கீழே உள்ள பல வரிகளிலும் காணலாம்: விஷ்ணுபுராணம் (1-12-76) - வரம் வரய தஸ்மாத்த்வம் யதாபிமதமாத்மந: ஸர்வம் ஸம்பத்ஸ்யதே பும்ஸாம் மயி த்ருஷ்டிபதம் கதே – எம்பெருமான் துருவனிடம், “உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக. நான் கண்ணில் தெரியும்போது, அங்கு அனைத்தும் ஏற்படும்”, என்றான். விஷ்ணுபுராணம் (1-12-79) - கிம் வா ஸர்வ ஜகத் ஸ்ரஷ்ட: ப்ரஸந்நே த்வயி துர்லபம் – துருவன் எம்பெருமானிடம், “அனைத்து உலகங்களையும் படைத்தவனே! நீ கண் முன்னே நிற்கும்போது எதுதான் கிடைப்பது அரிது?”, என்றான். விஷ்ணுபுராணம் (1-17-91) - தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்யம் – அவன் இங்கு தோன்றினால் அடைய இயலாதது எது? விஷ்ணுதர்மம் (43-46) - கிம் லோகே ததிஹ பரத்ர சாஸ்தி பும்ஸாம் யத்விஷ்ணு ப்ரவண தியாம் ந தால்ப்ய ஸாத்யம் – தால்ப்யனே! ஸர்வேச்வரனிடம் பக்தி கொண்டவர்களுக்கு இந்த உலகத்திலோ, அந்த உலகத்திலோ அடைய இயலாமல் உள்ளது எது? ப்ரஹ்மஸூத்ரம் (3-2-37) - பலமத உபபத்தே: - அனைத்து பலங்களும் ப்ரஹ்மத்திடமே உண்டாகின்றன. பக்தி அல்லது உபாஸநம் என்பதே நான்கு விதமான பலன்களுக்கு வழியாக உள்ளது. இதனை ஸ்ரீமத் பகவத் கீதை (7-16) - சதுர்விதா பஜந்தே மாம் – நான்கு வகையான மனிதர்கள் என்னை ஆராதிக்கின்றனர் – என்றது. இது போன்றே ப்ரபத்தியும் நான்கு விதமான பலன்களை அடையும் உபாயமாக உள்ளது என்று மஹரிஷிகள் கூறுகின்றனர். இதனை விஷ்ணுபுராணம் (1-9-73) - தாவதார்த்திஸ்ததா வாஞ்சா தாவந்மோஹஸ்ததா அஸுகம் யாவந்ந யாதி சரணம் த்வாமசேஷாதநாசநம் – அனைத்து பாவங்களையும் நீக்கவல்ல ப்ரபத்தியை உன்னிடம் பண்ணாமல் உள்ளவரை மட்டுமே மனிதனுக்குத் தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெறவேண்டும், புதிய செல்வம் அடையவேண்டும், சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவை உணராமல் இருப்பது, ஸம்ஸார துக்கம் ஆகியவை தொடரும் – என்றது.