Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்

பக்தி ப்ரபத்தி – ஒற்றுமை வேற்றுமைகள்

மூலம் - இவர்களில் வ்யாஸாதிகளைப்போலே உபாயாந்தர ஸமர்த்தனாகையாலே அகிஞ்சனுமன்றிக்கே விலம்பக்ஷமனாகையாலே அநந்யகதியுமன்றிக்கேயிருக்கிற ஸத்வாரக ப்ரபத்திநிஷ்டனுக்கு ப்ராப்தகர்ம பர்யவஸாந பாவியான அந்திம ப்ரத்யயத்தை அவதியாக உடைத்தான உபாஸனரூப அங்கியினுடைய யதாவந்நிஷ்பத்தி பூர்வகமான மோக்ஷம் பலம்.

– இவர்களில் பக்திக்கு மார்க்கமாக ப்ரபத்தியைக் கொண்டவர்கள், வ்யாஸர் முதலானோர் போன்று, மோக்ஷம் அடைய ப்ரபத்தி அல்லாத மற்ற மார்க்கங்களும் உடையவர்களாக இருப்பார்கள். ஆக இவர்கள் வேறு கதி இல்லாதவர்கள் (அகிஞ்சனர்கள் அல்லர்) அல்லர். இவர்கள் மோக்ஷம் கிட்டும்வரை பொறுத்திருக்கத் தயாராக உள்ளதால், மற்ற விஷயங்களிலும் ஈடுபடுவர். இவர்கள் பலன் தரத் தொடங்கிவிட்ட (ப்ராப்தகர்மம்) கர்மங்கள் முற்றிலுமாக அழிந்த பின்னரே மோக்ஷம் பெறுவார்கள். மரண காலத்தில் மட்டுமே இது நிகழ்வதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் பக்தியை மோக்ஷ உபாயமாகக் கொண்டதால், பக்தியின் இலக்கணம் பரிபூர்ணமாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே மோக்ஷம் கிட்டும்.