Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்
பலவிதமான உபாயங்களும் அவற்றின் உபகாரங்களும்
மூலம் – இப்படி “பசுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ச்ரயா: | தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்” என்றும், “தே வயம் பவதா ரக்ஷயா பவத்விஷயவாஸிந: | நகரஸ்தோ வநஸ்யோ வா த்வம் நோ ராஜா ஜநேச்வர” என்றும், “நற்பாலயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன்” என்றும், ”வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை” என்றும் சொல்லுகிற பகவதாபிமாந பகவத்விஷயவாஸாதிகளுக்கும் தன் பக்கலிலேயாதல் பிறர் பக்கலிலேயாதல், முன்பேயாதல் பின்பேயாதல் ஓர் உபாயத்துவக்குண்டு. எங்ஙனேயென்னில் இவை உபாஸநத்திலேயாதல் ப்ரபத்தியிலேயாதல் மூட்டியும், உத்பந்நோபாஸனனுக்கு உத்தரோத்தர உபசயத்தைப் பண்ணியும், ஸ்வதந்த்ரப்ரபத்த்யநுஷ்டாநம் பண்ணினவனுக்கு இங்குற்ற கைங்கர்யாபிவ்ருத்தியை உண்டாக்கியும், பகவத் ப்ராப்தியிலே த்வரையை உண்டாக்கியும் உபகாரங்களாம்.
– திவ்யதேசங்களில் வசிப்பது முதலான செயல்கள் மோக்ஷத்தை நேரடியாகவோ அல்லது தாமாகவோ அளிக்கவல்லவை அல்ல. கீழே உள்ள பல வரிகள் காண்க: சாண்டில்ய ஸ்ம்ருதி (1-15) - பசுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ச்ரயா: தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம் – பசு, மனிதன், பறவை முதலானவர்கள் ஒரு பாகவதனை அண்டுவதன் மூலமே மோக்ஷம் பெறுகின்றனர். இராமாயணம் ஆரண்யகாண்டம் (1-20) - தே வயம் பவதா ரக்ஷயா பவத்விஷயவாஸிந: நகரஸ்தோ வநஸ்யோ வா த்வம் நோ ராஜா ஜநேச்வர – நீ எங்களின் அரசனாக இருப்பதால் உன்னால் நாங்கள் காக்கப்பட வேண்டியவர்கள். நீ நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும் நீயே எங்கள் அரசன் ஆவாய். திருவாய்மொழி (7-5-1) - நற்பாலயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் – சிறந்த இடமான அயோத்தியில் வாசம் செய்யும் அனைத்து உயிர்களுக்கும் நல்ல ஸ்வபாவம் உண்டாகும்படிச் செய்தான். பெரியாழ்வார் திருமொழி (5-1-3) - வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை – என்னுடைய பலம் என்பது நீ வாசம் செய்கின்ற திவ்யதேசங்களில் வசிக்கும் வைணவன் என்பதே ஆகும். இந்த வரிகளிலும் மறைமுகமாக ப்ரபத்தி என்பது உக்திநிஷ்டையாகவோ ஆசார்யநிஷ்டையாகவோ கூறப்பட்டது எனலாம். எப்படி? மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் ஒருவனை பக்தி மார்க்கத்திலோ ப்ரபத்தி மார்க்கத்திலோ ஈடுபடுத்தவல்லவை ஆகும். ஒருவனுக்கு முன்பே பக்தி அல்லது உபாஸனம் கைகூடியிருந்தால், இது போன்றவை (திவ்யதேச வாசம்) அவனுக்கு அந்த பக்தி அல்லது உபாஸனத்தை மேலும் வளர்க்கவல்லவை ஆகும். ஒருவன் ப்ரபத்தி செய்திருப்பான் என்றால், இவை அவனுக்கு கைங்கர்ய ருசியை உண்டாக்கவல்லவை ஆகும். இப்படியாக இவை உதவுகின்றன.