Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்

ப்ரபத்தி இல்லாமல் மோக்ஷம் இல்லை

மூலம் - ஏதேனும் ஒரு ப்ரகாரமாகவுமாம், ஆரேனும் ஒருவர் அனுஷ்டிக்கவுமாம் ப்ரபத்திக்கல்லது ஸர்வேச்வரன் பரமபுருஷார்த்தம் கொடுக்க இரங்கான் என்றதாயிற்று.

– ஏதேனும் ஒரு உபாயம் மூலமாகவோ அல்லது ஓர் ஆசார்யன் நமக்காகவோ ப்ரபத்தி என்பதைச் செய்யவேண்டும். இப்படிச் செய்யாமல் ஸர்வேச்வரன் மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷத்தை அளிக்க முன்வரமாட்டான்.