Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 3)
அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்
ப்ரபத்தியின் வகைகள்
மூலம் - “ஸ்நாநம் ஸப்தவிதம் ஸ்ம்ருதம்” என்கிறபடியே யதாதிகாரம் மாந்த்ர மாநஸ திவ்ய வாயவ்யாதிகளும் துல்யபலங்களான ஸ்நாந பேதங்களானாற் போலே உக்தி ஆசார்ய நிஷ்டை என்கிற இவையும் ப்ரபத்தியில் முக பேதங்கள்.
ஸ்நாநம் ஸப்தவிதம் ஸ்ம்ருதம் – ஸ்நாநம் என்பது ஏழு வகைப்படும்; அவற்றுள் சில – மந்த்ரம் உச்சரித்தல், மானஸீகம், திவ்ய ஸ்நாநம், வாயு ஸ்நாநம் – போன்றவையாகும்; இவை ஒவ்வொன்றும் அந்தந்த ஸ்நாந முறைகளுக்குத் தகுதி உள்ளவர்களுக்கு ஏற்றதாகவே கூறப்பட்டது; இவை அனைத்தும் ஒரே போன்று ஸ்நாநமே ஆகும். இது போன்று, ப்ரபத்தி என்பது உக்திநிஷ்டை மற்றும் ஆசார்ய நிஷ்டை என்று இருவகைப்படும் (உக்திநிஷ்டை – ஆசார்யன் கூறும் ப்ரபத்தி வாக்யங்களைத் தானும் உச்சரித்துப் ப்ரபத்தி செய்து கொள்ளுதல்), ஆசார்யநிஷ்டை (ஆசார்யன் செய்கின்ற ப்ரபத்தியில் அடங்கியிருத்தல்).