Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்
முமுக்ஷுத்வே துல்யே ஸதி ச மதுவித்யாதிஷு யதா வ்யவஸ்தா ஸம்ஸித்தயதி க்ருதி விசேஷேண விதுஷாம் விகல்ப்யேத ந்யாஸே ஸ்திதி: இதரவித்யாஸு ச ததா நியத்யா வையாத்யம் நியமயிதும் ஏவம் ப்ரபவதி
– மோக்ஷ விருப்பம் கொண்டவர்களுக்கு அந்த விருப்பமானது ஒரே போன்று உள்ளபோதிலும், மதுவித்யை முதலான வித்யைகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இடையே வேறுபாடுகள் உணர்த்தப்படுகின்றன (ஒரு சிலர் இதனைச் செய்யலாம், ஒரு சிலர் வேறு சிலவற்றைச் செய்யலாம் போன்ற வேறுபாடுகள்). இப்படியாகவே ப்ரபத்தி மற்றும் சில வித்யைகளிலும் செயல்பாடுகளைக் குறித்த வேறுபாடுகள் கைக்கொள்ளப் படுகின்றன. இந்த நிலை இவர்களின் பூர்வகர்மங்கள் அல்லது அத்ருஷ்டம் காரணமாக, வேறு காரணம் ஏதும் கூற இயலாதபடி அமைகிறது.