Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம்

விஷமது பஹிஷ்குர்வந் தீரோ பஹிர்விஷயாத்மகம் பரிமிதரஸ ஸ்வாத்ம ப்ராப்தி ப்ரயாஸ பராங்முக: நிரவதி மஹாநந்த ப்ரஹ்மாநுபூதி குதூஹலீ ஜகதி பவிதா தைவாத் கச்சித் ஜிஹாஸித ஸம்ஸ்ருதி:

– சற்றும் கலக்கம் இல்லாத மனம் உள்ளவன் : ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதும், விஷம் கலந்த தேன் போன்றதும் ஆகிய உலக விஷயங்களை ஒதுக்கி; அற்பமான சுகத்தை அளிக்கவல்ல தனது ஆத்ம அனுபவத்தை அடைந்து ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கி; எல்லையற்ற ஆனந்தம் அளிக்கவல்ல ஸர்வேச்வரனுடைய அனுபவத்தில் ஆவல் கொண்டவனாக இருக்கக்கூடும். இவன் ஸர்வேச்வரனின் அநுக்ரஹம் மூலமாக ஸம்ஸாரத்தைக் கைவிட வேண்டும் என்னும் ஆசை கொண்டவன் ஆகிறான்.