Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம்
உலக விஷயங்களில் உள்ள தோஷங்களும் பகவத் விஷயத்தின் மேன்மையும்
மூலம் – “ப்ரவ்ருத்திலக்ஷணம் தர்மம் ப்ரஜாபதிரதாப்ரவீத்” என்கிற ப்ரவ்ருத்தி தர்மங்களில் நின்றும் நிவ்ருத்தராய், “நிவ்ருத்தலக்ஷணம் தர்மம் ருஷிர்நாராயணோ அப்ரவீத்” என்கிற நிவ்ருத்தி தர்மங்களிலே ப்ரவ்ருத்தரானவர்கள் முமுக்ஷுக்களான அதிகாரிகள்.
– மஹாபாரதம் சாந்திபர்வம் (219-4) - ப்ரவ்ருத்திலக்ஷணம் தர்மம் ப்ரஜாபதிரதாப்ரவீத் – ப்ரவ்ருத்தி தர்மங்களை ப்ரம்மன் உரைத்தான் – என்னும்படியாக உள்ள ப்ரவ்ருத்தி தர்மங்களை கைவிட்டும்; மஹாபாரதம் சாந்திபர்வம் (219-2) - நிவ்ருத்தலக்ஷணம் தர்மம் ருஷிர்நாராயணோ அப்ரவீத் – நாராயண ரிஷி என்பவர் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களை உரைத்தார் – என்னும்படியாக உள்ள தர்மங்களைப் பின்பற்ற வேண்டும். இதுவே மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவர்கள் என்று கூறப்படுபவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் ஆகும்.