Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம்
உலக விஷயங்களில் உள்ள தோஷங்களும் பகவத் விஷயத்தின் மேன்மையும்
மூலம் - “அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்”, “கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்”, “தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்யம் தர்மார்த்தகாமைரலமல்பகாஸ்தே”, “அந்தவஸ்து பலம் தத்பவத்யல்ப மேதஸாம்”, “அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்”, “மஹாபலாந் மஹாவீர்யாந் அநந்ததந ஸத்ஜயாந் | கதாந் காலேந மஹதா கதாசேஷாந்நராதிபாந் || ச்ருத்வா ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே அபி வா | த்ரவ்யாதௌ வா க்ருதப்ரஜ்ஞோ மமத்வம் குருதே நர:”, “ஸர்வம் துக்கமயம் ஜகத்”, “ஸ்வர்க்கே அபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோர்நாஸ்தி நிர்வ்ருத்தி:”, “ராஜ்யே க்ருத்நந்த்யவித்வாம்ஸோ மமத்வாஹ்ருத சேதஸ: | அஹம்மாந மஹாபாந மதமத்தா ந மாத்ருசா:”, “ஆப்ரஹ்மபவநாதேதே தோஷா: ஸத்தி மஹாபுநே | அத ஏவ ஹி நேச்சந்தி ஸ்வர்க்கப்ராப்திம் மநீஷிணா:”,”ப்ரஹ்மணா: ஸதநாதூர்த்வம் தத்விஷ்ணோ: பரமம் பதம் | சுத்தம் ஸநாதநம் ஜ்யோதி: பரம் ப்ரஹ்மேதி || ந தத்ர பூதா கச்சந்தி புருஷா விஷயாத்மகா: || டம்ப லோப மத க்ரோத த்ரோஹ மோஹைரபி த்ருதா: || நிர்மமா நிரஹங்காரா நிர்த்வந்த்வா: ஸம்யதேந்த்ரியா: | த்யாநயோகரதாச்சைவ தத்ர கச்சந்தி ஸாதவ:”, ரம்யாணி காமசாராணி விமாநாநி ஸமாஸ்ததா | ஆக்ரீடா விவிதா ராஜாந் பத்மிந்யச்ராமலோதகா:”, “ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந:” இத்யாதி ப்ரமாணங்களாலே அல்பத்வ அஸ்திரத்வ துக்கமூலத்வ துக்க மித்ரத்வ துக்கோதர்க்கத்வ விபரீதாபிமாநமூலத்வ ஸ்வாபாவிகாநந்தவிருத்தத்வங்களாகிற அசித்விஷயாநுபவ தோஷஸப்தகத்தையும் இவற்றில் யதாஸம்பவம் உண்டான சேதநமாத்ராநுபவ தோஷங்களையும், இவ்வநுபவங்களுக்கு எதிர்த்தட்டான பகவதநுபவத்தின் வைலக்ஷண்யத்தையும் விசதமாக அநுஸந்தித்து, “பரமாத்மநி யோ ரக்தோ விரக்த: அபரமாத்மநி” என்கிற அவஸ்தையையுடையராய்.
– கீழே உள்ள பல ப்ரமாணங்கள் காண்க: திருவாய்மொழி (3-2-6) - அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன் – அற்பமான விஷயங்களில் ஈடுபட்டு, அவற்றின் தோஷங்களை அறிந்து, அவற்றைக் கைவிட்டேன் திருவாய்மொழி (4-9-10) - கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் – ஐந்து புலன்களால் அடையப்படும் இன்பம், புலன்களால் அறிய இயலாத ஆத்ம அனுபவத்தின் இன்பம் ஆகியவற்றைக் கைவிட்டேன். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-17-91) - தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்யம் தர்மார்த்தகாமைரலமல்பகாஸ்தே – கருணையுடன் கூடிய எம்பெருமான் உள்ளபோது எதுதான் அடைவதற்குக் கடினம்? தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றால் ஆவதற்கு ஏதும் இல்லை. ஸ்ரீமத் பகவத் கீதை (7-23) - அந்தவஸ்து பலம் தத்பவத்யல்ப மேதஸாம் – அற்ப புத்தி உடையவர்களால் அடையப்படும் பலன்களும் அற்பமானவையே ஆகும். ஸ்ரீமத் பகவத் கீதை (9-33) - அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் – நிலையற்றதும், துன்பங்கள் சூழ்ந்துள்ளதும் ஆகிய இந்த உலகை அடைந்துள்ள நீ என்னை வணங்குவாயாக. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (4-24-142, 143) - மஹாபலாந் மஹாவீர்யாந் அநந்ததந ஸத்ஜயாந் கதாந் காலேந மஹதா கதாசேஷாந்நராதிபாந் ச்ருத்வா ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே அபி வா த்ரவ்யாதௌ வா க்ருதப்ரஜ்ஞோ மமத்வம் குருதே நர: - இந்த உலகில் மிகுந்த பலம், அளவற்ற செல்வம், வீரம் ஆகியவற்றுடன் வாழ்ந்த அரசர்கள், தங்களின் நீண்ட வாழ்வு முடிந்த பின்னர், இந்த உலகில் தங்களைப் பற்றிய சரிதங்களை மட்டுமே விட்டுச் சென்றனர். இதனை அறிந்த அறிவாளி ஒருவன் பிள்ளை, மனைவி, வீடு, நிலம், செல்வம் முதலானவற்றில் “என்னுடையது” என்ற எண்ணம் கொள்ளமாட்டான். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-17-69) - ஸர்வம் துக்கமயம் ஜகத் – இந்த உலகம் முழுவதும் துக்கமயமானது. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-50) - ஸ்வர்க்கே அபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோர்நாஸ்தி நிர்வ்ருத்தி: - ஸ்வர்க்கத்தில் உள்ளவன் எப்போதும் தனது புண்ணிய பலன் குறைந்து விட்டால், தான் கீழே விழுந்து விடுவோம் என்று பயம் காரணமாக சுகம் என்பது அவனுக்கு இருப்பதில்லை. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-7-7) - ராஜ்யே க்ருத்நந்த்யவித்வாம்ஸோ மமத்வாஹ்ருத சேதஸ: அஹம்மாந மஹாபாந மதமத்தா ந மாத்ருசா: - அஹங்காரம் கொண்ட மனம் படைத்தவர்கள் மட்டுமே, அந்த மயக்கம் காரணமாக ராஜ்யம், நாடு முதலானவற்றின் மீது ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். என் போன்றவர்கள் அவற்றுக்காக ஏங்குவது இல்லை. இதிஹாஸ ஸமுச்சயம் (4-49) - ஆப்ரஹ்மபவநாதேதே தோஷா: ஸத்தி மஹாபுநே அத ஏவ ஹி நேச்சந்தி ஸ்வர்க்கப்ராப்திம் மநீஷிணா: - முனிவரே! ப்ரம்மலோகம் தொடங்கி அனைத்து உலகங்களிலும் அற்பமான தோஷங்கள் பரவியே உள்ளன. எனவே அறிவு நிறைந்தவர்கள் ஸ்வர்க்கத்தை விரும்புவதில்லை. மஹாபாரதம் வநபர்வம் (217-37, 38, 39) - ப்ரஹ்மணா: ஸதநாதூர்த்வம் தத்விஷ்ணோ: பரமம் பதம் சுத்தம் ஸநாதநம் ஜ்யோதி: பரம் ப்ரஹ்மேதி ந தத்ர பூதா கச்சந்தி புருஷா விஷயாத்மகா: டம்ப லோப மத க்ரோத த்ரோஹ மோஹைரபி த்ருதா: நிர்மமா நிரஹங்காரா நிர்த்வந்த்வா: ஸம்யதேந்த்ரியா: த்யாநயோகரதாச்சைவ தத்ர கச்சந்தி ஸாதவ: - ப்ரம்மலோகத்தின் மேலே விஷ்ணுவின் பரமபதம் உள்ளது. அது தூய்மையாகவும், நித்யமாகவும், ஜ்யோதி ரூபமாகவும் உள்ளது. பரம்பொருளை அனுபவிக்கத் தக்கதாக உள்ளதால் பரப்ரஹ்மம் என்றும் கூறப்படுகிறது. அந்த உலகிற்கு டம்பம், லோபம், ஆணவம், கோபம், துரோகம், ஆசை முதலியவற்றால் பீடிக்கப்பட்ட அறிவற்றவர்கள் செல்வதில்லை. அஹங்காரம் மற்றும் மமகாரம் ஆகியவற்றைக் கைவிட்டவர்கள், இரட்டையாக வரும் இன்பதுன்பங்களில் சமநிலையில் உள்ளவர்கள், புலன்களைத் தங்கள் வசம் வைத்தவர்கள், பகவானைத் த்யானித்தபடி உள்ளவர்கள் – இப்படிப்பட்ட ஸாதுக்கள் மட்டுமே அங்கு செல்கின்றனர். மஹாபாரதம் சாந்தி பர்வம் (196-4) - ரம்யாணி காமசாராணி விமாநாநி ஸமாஸ்ததா ஆக்ரீடா விவிதா ராஜாந் பத்மிந்யச்ராமலோதகா: - பரமபதத்தில் விருப்பப்படி செல்லக்கூடிய அழகான விமானங்கள், மண்டபங்கள், பலவிதமான தோட்டங்கள், தெளிவான நீர் நிறைந்த தாமரைக் குளங்கள் ஆகியவை உள்ளன. மஹாபாரதம் சாந்தி பர்வம் (196-6) - ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந: - எம்பெருமானின் இருப்பிடமான பரமபதத்திற்கு முன்பாக மற்ற லோகங்கள் அனைத்தும் நரகம் போன்றவையே. மேலே உள்ள பல ப்ரமாணங்கள் மூலமாக, அசித் பொருள்களால் ஏற்படும் இன்பங்கள் அனைத்தும் ஏழு வகையான தோஷங்களுடன் கூடியவை என்று அறியவேண்டும். இவையாவன – அற்பமானவை, ஸ்திரம் அற்றவை (நிலையற்றவை), துக்கத்தின் தொடக்கமாக உள்ளவை, துக்கம் நிறைந்தவை, துக்கம் உண்டாக்கவல்லவை, அஹங்காரம் முதலானவற்றால் உண்டானவை, ஜீவனின் இயல்பான ஆனந்தமயமான நிலைக்கு எதிரானவை – என்பதாகும். இதே தோஷங்கள் ஒருவன் தனது ஆத்ம அனுபவத்தில் திளைக்கும்போதும் உண்டாகக் கூடியவை என்று அறியவேண்டும். இவற்றுக்கு எதிர்தட்டாக உள்ளதான பகவத் அனுபவத்தின் மூலம் உண்டாகவல்ல ஆனந்தத்தில் உள்ள நன்மைகளை அறிந்து, அதில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் ஒருவன் பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதியில் கூறியபடி - பரமாத்மநி யோ ரக்தோ விரக்த: அபரமாத்மநி – எம்பெருமானிடம் மட்டுமே ஆசை கொண்டபடி, மற்ற பொருள்கள் மீது ஆசை இல்லாதபடி – என்ற நிலைக்கு வந்துவிடுவான்.