Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம்

கால ஆவர்த்தாந் ப்ரக்ருதி விக்ருதீ: காமபோகேஷு தோஷாந் ஜ்வாலா கர்த்த ப்ரதிம துரித உதர்க்க துக்க அநுபூதிம் யாதாதத்யம் ஸ்வபரிநியதம் யச்ச திவ்யம் பதம் தத் காராகல்பம் வபுரபி விதந் கஸ்திதிக்ஷேத பந்தம்

– சுழல் போன்று மீண்டும் மீண்டும் வருகின்ற காலங்கள், ப்ரக்ருதி மற்றும் அதன் மாற்றமான மஹத் போன்ற தத்துவங்கள், இந்த உலகம் மற்றும் அந்த உலகம் ஆகியவற்றில் உள்ள சுகங்களில் மறைந்துள்ள தோஷங்கள், நெருப்பால் நிரம்பியுள்ள குழியாக உள்ள பாவங்களின் பலனாக வருகின்றன துன்பங்கள், தன்னிடமும் எம்பெருமானிடமும் எப்போதும் உள்ள ஸ்வபாவங்கள், மிகவும் மேன்மையான பரமபதம், சிறை போன்ற இந்த உடல் – இப்படிப்பட்ட பலவற்றையும் அறிந்த யார் ஒருவன், இந்த ஸம்ஸார பந்தத்தை விரும்புவான்?