Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 35)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ஜநபத புவநாதி ஸ்தாந் ஜைத்ராஸநஸ்தேஷு அநுகத நிஜவார்த்தம் நச்சரேஷு ஈச்வரேஷு பரிசித் நிகமாந்த: பச்யதி ஸ்ரீஸஹாயம் ஜகதி கதிம் அவித்யா தந்துரே ஜந்துரேக:

– எல்லையற்ற கர்மங்கள், அறியாமைகள் சூழ்ந்த இந்த உலகத்தில், பல இடங்களிலும் உலகங்களை வென்று அமர்ந்தவர்களான பலரும், தங்களைப் பற்றிய வீரக்கதைகள் தங்களுடன் சேர்ந்து நாசம் அடையும்படி உள்ளனர். இப்படிப்பட்ட உலகத்தில், வேதாந்தங்களை அறிந்த ஒருவன் ஸ்ரீமந் நாராயணனை, இந்த உலகின் ரக்ஷகனாகக் காண்கிறான்.