Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 33)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

திவ்யதம்பதிகளே அனைத்துமாக உள்ளனர்

மூலம் - இத்தை மயர்வற மதிநலமருளப் பெற்று ஆத்யஸ்ய ந: குலபதே: என்கிறபடியே ப்ரபந்நஸந்தாந கூடஸ்தரான நம்மாழ்வாரும் “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்கண்ட சதிர் கண்டு” என்று அருளிச் செய்தார். இவ்விஷயத்தில் வக்த்வ்யமெல்லாம் சது:ச்லோகீ வ்யாக்யாநத்திலே பரபக்ஷ ப்ரதிக்ஷேப்பூர்வகமாகப் பரக்கச் சொன்னோம். அங்கே கண்டு கொள்வது.

– நாம் அடையும் இலக்காக, நமக்குச் சரணம் அளிக்கும் இடமாக பகவானுடன் பிராட்டியும் சேர்ந்தே உள்ளால் என்னும் கருத்தை, ப்ரபத்தி செய்தவர்களின் பரம்பரையில் முதலாவதாக உள்ளவரும், எம்பெருமானிடம் இருந்து தடுமாற்றம் இல்லாத ஞானத்தைப் பெற்றவரும் ஆகிய நம்மாழ்வார் திருவாய்மொழியில் (4-9-10) - ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்கண்ட சதிர் கண்டு – அழகான கைவளையல்களுடன் கூடிய நீயும் பிராட்டியும் நிற்கையில் - என்று அருளிச்செய்தார்.