Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 29)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
அவனுக்கு மட்டுமே அடிமையாக உள்ளதும், மற்ற தேவதைகளைக் கைவிடுவதும்
மூலம் - இந்தப் பரதேவதாபாரமார்த்தத்தைத் திருமந்த்ரத்திலே கண்டு ததீயபர்யந்தமாக தேவதாந்தர த்யாகமும் ததீய பர்யந்தமாக பகவச்சேஷத்வமும் ப்ரதிஷ்டிதமானபடியை “மற்றுமோர் தெய்வம் உளதென்றிருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க் கடிமை” என்கிற பாட்டிலே ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வார்த்தக்ரஹணம் பண்ணின ஆழ்வாரருளிச் செய்தார்.
– ஸர்வேச்வரனிடமிருந்து நேரடியாகவே உபதேசம் பெற்ற திருமங்கை யாழ்வார், இவனைப் பற்றிய உண்மையை திருமந்த்ரம் மூலமாக உணர்ந்தார். இப்படியாக இவர் மற்ற தேவதைகளைக் கைவிட்டும், இவனுக்கு மட்டுமே அடிமையாக உள்ள நிலையையும் அடைந்தார். இதனை பெரியதிருமொழியில் (8-10-3) - மற்றுமோர் தெய்வம் உளதென்றிருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க் கடிமை – உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வம் உள்ளது என்று கூறுபவர்களுடன் நான் வசிக்கமாட்டேன்; உனது அடியார்களுக்கு அடிமை செய்து கிடப்பதையே விரும்பினேன் – என்றார்.