Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 27)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
நாராயணனே உயர்ந்த தெய்வம் என்பது ரஹஸ்யத்ரயத்தில் உள்ள இடங்கள்
மூலம் - இப்பரதேவதா பாரமார்த்தம் திருமந்திரத்தில் ப்ரதமாக்ஷரத்திலும் நாராயண சப்தத்திலும், த்வயத்தில் ஸவிசேஷணங்களான நாராயண சப்தங்களிலும், சரமச்லோகத்தில் “மாம், அஹம்” என்கிற சப்தங்களிலும் அநுஸந்தேயம்.
– நாராயணனே உயர்ந்த தெய்வம் என்னும் விஷயமானது திருமந்த்ரத்தில் உள்ள முதல் எழுத்தான “அ” என்பதிலும் (ஓம் என்பதில் உள்ள அ), நாராயண என்பதிலும் காணலாம். இதனை த்வய மந்த்ரத்தில் உள்ள ஸ்ரீ என்பதுடன் கூடிய நாராயண என்பதில் காணலாம். சரமச்லோகத்தில் – நான் – என்னும் பதத்தில் காணலாம்.