Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 19)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்
மூலம் - இப்படி ஸூர்யபக்த்யாதிகள் பரஸ்பரயா பகவத்பக்யாதிகளிலே மூட்டுவதும் பராவர தத்த்வங்களிலே ஏக்யபுத்தியும் வ்யத்யயபுத்தியும் ஸமத்வபுத்தியும் மற்றும் இப்புடைகளிலே வரும் மதிமயக்கங்களும் ஆஸுரஸ்வபாவத்தாலே ஒரு விஷயத்தில் ப்ரத்வேஷாதிகளுமின்றிக்கே ஸூர்யாதிகளைப் பற்றுமவர்களுக்கே என்னுமிடத்தை “யே து ஸாமாந்ய பாவேந மந்யந்தே புருஷோத்தமம் தே வை பாஷாண்டிநோ ஜ்ஞேயா: ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா:” இத்யாதிகளிலே கண்டு கொள்வது.
– இப்படியாக சூர்யன் முதலானவர்களிடம் கொள்ளும் பக்தியானது எம்பெருமானிடம் இட்டுச்செல்லும். ஆயினும் இது எப்போது நிகழும் என்றால், எம்பெருமானின் மேன்மையைப் பற்றிய ஐயமோ, அவன் கீழ் உள்ள மற்ற ஜீவாத்மாக்களைப் பற்றிய மயக்கமும் இல்லாமல் இருந்தாலே ஆகும். இத்தகைய மயக்கங்கள் எவை என்றால் – எம்பெருமானும் இவர்களும் ஒன்றே, ஜீவாத்மாவே பரம்பொருள், இவை அனைத்தும் எம்பெருமானுக்கு நிகரான மேன்மை உடையவை, அவர்களிடம் இயல்பான அசுரத்தன்மை இல்லாமை – போன்றவையாகும். இதனை - யே து ஸாமாந்ய பாவேந மந்யந்தே புருஷோத்தமம் தே வை பாஷாண்டிநோ ஜ்ஞேயா: ஸர்வகர்ம பஹிஷ்க்ருதா: - புருஷோத்தமனாகிய எம்பெருமானும் மற்ற அற்ப தேவதைகளும் ஒன்றே என எண்ணுபவர்கள் பாஷாண்டிகள் (வேஷதாரிகள்) என அறியவேண்டும்; அவர்களுக்கு எந்தவிதமான கர்மம் இயற்றும் அதிகாரமும் இல்லை என அறியவேண்டும் – என்ற ச்லோகம் மூலம் அறியலாம்.