Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 18)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்
மூலம் - இத்தாலே இவர்களை மோக்ஷோபகாரகராகச் சொன்னவிடங்களும் ஆசார்யாதிகளைப் போலே ஞானாதிஹேதுக்களாகையாலே என்றும் நிர்ணிதம். இவ்வர்த்தம் “ஸூர்யஸ்யைவ து யோ பக்த: ஸப்த ஜன்மாந்தரம் நர: தஸ்யைவ து ப்ரஸாதேந ருத்ர பக்த: ப்ரஜாயதே சங்கரஸ்ய து யோ பக்த: ஸப்த ஜன்மாந்தரம் நர: தஸ்யைவ து ப்ரஸாதேந விஷ்ணு பக்த: ப்ரஜாயதே வாஸுதேவஸ்ய யோ பக்த: ஸப்த ஜன்மாந்தரம் நர: தஸ்யைவ து ப்ரஸாதேந வாஸுதேவ ப்ரலீயதே” என்கிற இடத்திலும் விவக்ஷிதம்.
– ஒரு சில இடங்களில் இந்தத் தெய்வங்கள் மோக்ஷத்திற்கான உபாயங்கள் என்பது போன்று கூறப்பட்டாலும், அவர்கள் ஆசார்யர்கள் போன்று மோக்ஷத்திற்கான ஞானம் மட்டுமே அளிக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். இதனை - ஸூர்யஸ்யைவ து யோ பக்த: ஸப்த ஜன்மாந்தரம் நர: தஸ்யைவ து ப்ரஸாதேந ருத்ர பக்த: ப்ரஜாயதே சங்கரஸ்ய து யோ பக்த: ஸப்த ஜன்மாந்தரம் நர: தஸ்யைவ து ப்ரஸாதேந விஷ்ணு பக்த: ப்ரஜாயதே வாஸுதேவஸ்ய யோ பக்த: ஸப்த ஜன்மாந்தரம் நர: தஸ்யைவ து ப்ரஸாதேந வாஸுதேவ ப்ரலீயதே – ஏழு பிறவிகளில் சூர்யனிடம் பக்தி கொள்ளும் ஒருவன், சூர்யனின் அருள் காரணமாக ருத்ரனின் பக்தனாகிறான்; ஏழு பிறவிகளில் ருத்ரனிடம் பக்தி கொள்ளும் ஒருவன், ருத்ரனின் அருள் காரணமாக விஷ்ணுவின் பக்தனாகிறான்; ஏழு பிறவிகளில் வாஸுதேவனிடம் பக்தி கொள்ளும் ஒருவன், வாஸுதேவனின் அருள் காரணமாக வாஸுதேவனிடமே செல்கிறான் – என்பதன் மூலம் அறியலாம்.