Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 17)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

மூலம் - இவர்கள் முமுக்ஷுக்களுக்கு அநுபாஸ்யரென்னுமிடமும், இவர்களுக்குக் காரணபூதனான ஸர்வேச்வரனே இவர்களுக்கும் மற்றுமுள்ள முமுக்ஷுக்களுக்கும் உபாஸ்யரென்னுமிடமும் “ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சித் அஸ்தி பராயணம்” என்றும், “ப்ரஹ்மாணாம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தேவதாஸ்ஸ்ம்ருதா: ப்ரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிதிதம் பலம்” என்றும், “ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்த்வ ஸம்ஸ்திதை:, உபாஸ்ய: அயம் ஸதா விப்ரா உபாய: அஸ்மி ஹரே: ஸ்ம்ருதௌ” என்றும் சொல்லப்பட்டது.

– ப்ரம்மன், ருத்ரன் போன்றவர்கள் முமுக்ஷுக்களால் வழிபட அவசியம் அற்றவர்கள் என்பதும், இந்த தெய்வங்களுக்குக் காரணமாக உள்ள நாராயணனே இந்தத் தெய்வங்களாலும் முமுக்ஷுக்களாலும் உபாஸிக்கப்பட வேண்டியவன் என்பதும் கீழே உள்ள ப்ரமாணங்களில் காணலாம்: விஷ்ணு தர்மம் (1-59) - ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சித் அஸ்தி பராயணம் – ஸம்ஸாரம் என்னும் கடலில் மூழ்கி, உலக விஷயங்களில் சிக்குண்ட மனதை உடையவர்களை கரையேற்றும் ஓடம் விஷ்ணுவே அல்லாமல், அவர்களால் அடையக்கூடிய சிறந்தது வேறு ஏதும் இல்லை. மஹாபாரதம் சாந்திபர்வம் (350-36) - ப்ரஹ்மாணாம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தேவதாஸ்ஸ்ம்ருதா: ப்ரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிதிதம் பலம் – விவேகம் உள்ளவர்கள் ப்ரம்மன், ருத்ரன் போன்ற தேவதைகளை வணங்குவதில்லை, காரணம் இவர்கள் அளிக்கும் பலன்கள் மிகவும் அற்பமானவையே ஆகும். ஹரிவம்ஸம் (132-8.14) - ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்த்வ ஸம்ஸ்திதை: - சிவன் கூறுவது, “ஸத்வ குணம் கொண்ட அந்தணர்களே! உங்களால் எப்போதும் த்யானிக்கப்பட வேண்டியவன் ஸ்ரீஹரி ஒருவனே”. ஹரிவம்ஸம் - உபாஸ்ய: அயம் ஸதா விப்ரா உபாய: அஸ்மி ஹரே: ஸ்ம்ருதௌ – சிவன் கூறுவது, “ஸ்ரீஹரி மட்டுமே உபாஸிக்கத் தகுந்தவன் ஆவான். அவனை நீங்கள் த்யானம் செய்வதற்கு ஏற்ற வழிகாட்டியாக நான் இருக்கிறேன்”.