Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 16)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்
மூலம் - கருவிலே திருவுடையார்களாய் ஜாயமானதசையிலே ரஜஸ்தம: ப்ரசமஹேதுவான மதுஸூதநனுடைய கடாக்ஷமுடையவர்கள் முமுக்ஷுக்களாவார்களென்னுமிடமும், ப்ரஹ்ம ருத்ர த்ருஷ்டரானவர்கள் ரஜஸ்தம: பரதந்த்ரராவார்களென்னுமிடமும் ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேந்மதுஸூதந: ஸாத்த்விகஸ்ஸது விஜ்ஞேயஸ்ஸ வை மோக்ஷார்த்தசிந்தக: பச்யத்யேநம் ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ர: அதவா புந: ரஜஸா தமஸா ச அஸ்ய மானஸம் ஸமபிப்லுதம் என்று விபஜிக்கப்பட்டது.
– மதுஸூதனனின் கடாக்ஷம் என்பது ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அறுக்கவல்லது. தாயின் கருவில் உள்ளபோதே பாக்கியம் உடையவனாக இருக்கும் ஒருவன், இப்படிப்பட்ட மதுஸூதனனின் கடாக்ஷத்தைத் தனது பிறப்பின்போதே பெற்றுவிடுகிறான் (இதுவே ஜாயமான கடாக்ஷம் எனப்படும்). இவன் முமுக்ஷுவாகவே உள்ளான் (எப்போதும் மோக்ஷத்தில் விருப்பம் கொண்டவனாக உள்ளான்). பிறக்கும்போது ப்ரம்மன், ருத்ரன் பார்வை பெற்றவர்கள் ரஜஸ் மற்றும் தாமஸ குணம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். இதனை மஹாபாரதம் சாந்திபர்வம்(358-73:77) - ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேந்மதுஸூதந: ஸாத்த்விகஸ்ஸது விஜ்ஞேயஸ்ஸ வை மோக்ஷார்த்தசிந்தக: பச்யத்யேநம் ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ர: அதவா புந: ரஜஸா தமஸா ச அஸ்ய மானஸம் ஸமபிப்லுதம் – யார் ஒருவனை, அவன் பிறக்கும்போதே மதுஸூதனன் கடாக்ஷிப்பானோ, அவன் ஸத்வகுணத்துடன் கூடியவன் ஆவான்; இவன் எப்போதும் மோக்ஷத்தைப் பற்றியே சிந்தித்தபடி இருப்பான்; யார் ஒருவனை, அவன் பிறக்கும்போது ப்ரம்மனோ ருத்ரனோ கண்டார்கள் என்றால், அவன் எப்போதும் ரஜோ மற்றும் தாமஸ குணங்கள் நிறைந்தவனாகவே இருப்பான் – என்று வேறுபடுத்திக் கூறியது.