Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 15)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ஸ்ரீமந் நாராயணனுக்கு ஒப்பும் இல்லை, இவனை விட உயர்ந்தவரும் இல்லை

மூலம் - இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் நாராயணன் ஸமாதிக தரித்ரன் என்னுமிடத்தை, “ந பரம் புண்டரீகாக்ஷாத் த்ருச்யதே புருஷர்ஷப; பரம் ஹி புண்டரீகாக்ஷாத் பூதம் ந பவிஷ்யதி; ந விஷ்ணோ: பரமோ தேவோ வித்யதே ந்ருபஸத்தம; ந வாஸுதேவாத் பரம் அஸ்தி மங்களம் ந வாஸுதேவாத் பரம் அஸ்தி பாவநம் ந வாஸுதேவாத் பரம் அஸ்தி தைவதம் ந வாஸுதேவம் ப்ரணிபத்ய ஸீததி; த்ரைலோக்யே தாத்ருசா: கச்சித் ந ஜாதோ ந ஜநிஷ்யதே; ந தைவம் கேசவாத்பரம்; ராஜாதிராஜஸ்ஸர்வேஷாம் விஷ்ணுர்ப்ரஹ்மமயோ மஹாந்; ஈச்வரம் தம் விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி:” இத்யாதிகளாலே பலபடியும் சொன்னார்கள்.

– இப்படியாக அனைத்துவிதங்களிலும் தனக்கு ஒப்பாக யாரும் இல்லாதவனாகவும், தனக்கு மேல் யாரும் இல்லாதவனாகவும் நாராயணன் உள்ளான் என்பதைக் கீழே உள்ள பல வரிகளில் உணரலாம்: மஹாபாரதம் பீஷ்ம பர்வம் (67-2) - ந பரம் புண்டரீகாக்ஷாத் த்ருச்யதே புருஷர்ஷப – புருஷர்களில் உயர்ந்தவனே! அழகான தாமரை போன்ற கண்கள் கொண்ட எம்பெருமானை விட உயர்ந்தவர்களைக் காண இயலாது. மஹாபாரதம் பீஷ்ம பர்வம் (67-17) - பரம் ஹி புண்டரீகாக்ஷாத் பூதம் ந பவிஷ்யதி - அழகான தாமரை போன்ற கண்கள் கொண்ட எம்பெருமானை விட உயர்ந்தவர்கள் இனி உண்டாகப்போவதில்லை. பரமோ தேவோ வித்யதே ந்ருபஸத்தம – அரசர்களில் உயர்ந்தவனே! எம்பெருமானை விட உயர்ந்த தேவர்களைக் காண இயலாது. ந வாஸுதேவாத் பரம் அஸ்தி மங்களம் ந வாஸுதேவாத் பரம் அஸ்தி பாவநம் ந வாஸுதேவாத் பரம் அஸ்தி தைவதம் ந வாஸுதேவம் ப்ரணிபத்ய ஸீததி – வாஸுதேவனை விடச் சிறந்த மங்களம் ஏதும் இல்லை, அவனைக் காட்டிலும் நமது பாவங்களை நீக்கவல்ல தூய்மையான வஸ்து வேறு எதுவும் இல்லை, அவனை விட உயர்ந்த தெய்வம் ஏதும் இல்லை, அவனை அடைந்த பின்னர் யாரும் வருத்தம் கொள்வதில்லை. த்ரைலோக்யே தாத்ருசா: கச்சித் ந ஜாதோ ந ஜநிஷ்யதே – மூன்று உலகங்களிலும் எம்பெருமானுக்கு நிகராக யாரும் இல்லை, இனியும் பிறக்கப்போவதில்லை. நரஸிம்ஹ புராணம் (18-33) - ந தைவம் கேசவாத்பரம் – கேசவனை விட உயர்ந்த தெய்வம் வேறு இல்லை. மஹாபாரதம் - ராஜாதிராஜஸ்ஸர்வேஷாம் விஷ்ணுர்ப்ரஹ்மமயோ மஹாந்; ஈச்வரம் தம் விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி: - அனைத்து உயிர்களுக்கும் அரசன் போன்றுள்ள ப்ரம்மனுக்கும் அரசனாக விஷ்ணு உள்ளான், அவனே ப்ரஹ்மம், அவனே மிகவும் உயர்ந்தவன், இதனால் அவனை நாம் ஈச்வரன் என்கிறோம், அவனே அனைத்தின் தந்தை, அனைத்தின் உற்பத்தி நாயகன் அவனே.