Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 14)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ப்ரம்மன் முதலானோர் எம்பெருமானின் தொண்டர்கள்

மூலம் - இவர்கள் சேஷபூதர் அவன் சேஷி என்னுமிடத்தை, “தாஸபூதாஸ்ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மாந: பரமாத்மன: | அத: அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாமி அஹம்” என்று மந்த்ரராஜபதஸ்தோத்ரத்திலே ஸர்வஜ்ஞனான ருத்ரன் தானே சொன்னான்.

– ப்ரம்மன் முதலானோர்கள் தொண்டர்கள் என்பதையும், ஸர்வேச்வரனே இவர்களின் எஜமானன் என்பதையும் மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில், அனைத்தையும் அறிந்தவனான சிவன் – தாஸபூதாஸ் ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மாந: பரமாத்மன: அத: அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாமி அஹம் – அனைத்து ஆத்மாக்களும் பரமாத்மாவுக்கு இயற்கையாகவே அடிமைகள் ஆவர்; இந்த ஞானம் கொண்டவனான நானும், உனது தொண்டனான நானும் உன்னை வணங்கி நிற்கிறேன் – என்றான்.