Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
ப்ரம்மன் முதலானோர் எம்பெருமானின் சரீரங்கள்
மூலம் - இவர்கள் சரீரமாய் அவன் ஆத்மாவாயிருக்கிறபடியை, “தவாந்தராத்மா மம ச யே ச அந்யே தேஹிஸம்ஞிதா: | ஸர்வேஷாம் ஸாக்ஷிபூத: அஸௌ ந க்ராஹ்ம: கேநசித் க்வசித்” என்று ப்ரஹ்மா ருத்ரனைக் குறித்துக் கூறினான்.
– ப்ரம்மன் முதலானோர் ஸர்வேச்வரனின் சரீரமாக உள்ளதையும், அவன் இவர்களது ஆத்மாவாக உள்ளதையும் மஹாபாரதம் சாந்திபர்வம் (361-4) - தவாந்தராத்மா மம ச யே ச அந்யே தேஹிஸம்ஞிதா: ஸர்வேஷாம் ஸாக்ஷிபூத: அஸௌ ந க்ராஹ்ம: நசித் க்வசித் – உனக்கு, எனக்கு, சரீரம் கொண்ட பலருக்கு ஆத்மாவாக உள்ள ஸர்வேச்வரன் அனைவரது செயல்பாடுகளையும் எப்போதும் பார்த்தபடி உள்ளான்; ஆனால் அவனை எளிதாக யாராலும் காண இயலாது – என்று கூறியது. இந்த வரி ப்ரம்மன் ருத்ரனிடம் கூறுவதாகும்.