Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 12)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
ப்ரம்மன் முதலானோர் எம்பெருமானின் விசேஷணமாவர்
மூலம் - இப்படி வஸ்த்வந்தரம் போல இவர்களும் ஸர்வசரீரியான ஸர்வேச்வரனுக்கு ப்ரகாரபூதரென்னுமிடம் வஸ்த்வந்தரங்களுக்கும் இவர்களுக்கும் சேர நாராயணாதிசப்த ஸாமாநாதிகரண்யத்தாலே ஸித்தம்.
– மற்ற பொருள்கள் போன்றே, ப்ரம்மன் முதலானோர் அனைத்தையும் தனது சரீரமாக்க் கொண்ட ஸர்வேச்வரனுக்கு விசேஷணமாக உள்ளவர் ஆவர். இதனை நாராயண என்ற பதத்துடன் மற்ற பொருள்கள் கூறப்படுவது போன்று, இவர்களும் கூறப்படுவதன் மூலம் அறியலாம்.