Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 11)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
ப்ரம்மன் முதலானோர் எம்பெருமானின் விபூதிகள்
மூலம் - இவர்கள் உபயவிபூதிநாதனான ஸர்வேச்வரனுக்கு விபூதிபூதரென்னுமிடம் ப்ரஹ்மா தக்ஷாதய: கால:, ருத்ர: காலாந்தகாத்யாச்ச இத்யாதிகளிலே மற்றுள்ளாரோடு துல்யமாகச் சொல்லப்பட்டது.
– நித்யவிபூதி மற்றும் லீலாவ்பூதி ஆகிய இரண்டிற்கும் தலைவனாக உள்ள ஸர்வேச்வரனின் விபூதிகளாக ப்ரம்மன் முதலானோர் உள்ளனர். இதனைக் கீழே உள்ள விஷ்ணு புராண வரிகளின் மூலம் அறியலாம்: (1-22-31) - ப்ரஹ்மா தக்ஷாதய: கால: - ப்ரம்மன், தக்ஷன், காலம் போன்றவை எம்பெருமானின் விபூதிகளாக இருந்து அனைத்தையும் உண்டாக்குகின்றன. (1-22-33) - ருத்ர: காலாந்தகாத்யாச்ச – ருத்ரன், யமன் போன்றவர்கள் எம்பெருமானின் விபூதிகளாக இருந்து ப்ரளய காரணமாக உள்ளனர்.