Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 10)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ப்ரம்மன் முதலானோர் எம்பெருமானை அண்டியே உள்ளனர்

மூலம் - இவர்களுக்குப் பகவான் ஆச்ரயணீயனென்னுமிடத்தையும், பகவானுக்கு ஓர் ஆச்ரயணீயரில்லையென்னுமிடத்தையும், “ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ரஹ்மாணமாச்ரித: | ப்ரஹ்மா மாமாச்ரிதோ ராஜந் அஹம் கஞ்சிதுபாச்ரித: || மமாச்ரயோ ந கச்சித்து ஸர்வேஷாமாச்ரயோ ஹி அஹம்” என்று தானேயருளிச் செய்தான்.

ப்ரம்மன் முதலானோர் தங்கள் பாதுகாப்பிற்காக எம்பெருமானை அண்டியே இருக்கவேண்டும். ஆனால் எம்பெருமான் தனது பாதுகாப்பிற்கு யாரையும் அண்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கருத்தை எம்பெருமான் தனது திருவாயின் மூலம் மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வத்தில் (118-37, 38) - ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ரஹ்மாணமாச்ரித: ப்ரஹ்மா மாமாச்ரிதோ ராஜந் அஹம் கஞ்சிதுபாச்ரித: மமாச்ரயோ ந கச்சித்து ஸர்வேஷாமாச்ரயோ ஹி அஹம் – அரசனே! தேவர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு ருத்ரனை அடைகின்றனர்; ருத்ரன் தனது பாதுகாப்பிற்கு ப்ரம்மனை அடைகிறான்; ப்ரம்மன் தனது பாதுகாப்பிற்கு என்னை அடைகிறான்; நான் எனது பாதுகாப்பிற்கு யாரையும் அண்டுவதில்லை; நான் அனைவருக்கும் புகலிடமாக உள்ளதால், என்னால் அடையப்படும் இடம் ஏதும் இல்லை – என்றது காண்க.