Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 9)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
ப்ரம்மன் முதலானோர் த்யானிக்கத் தக்கவர்கள் அல்லர்
மூலம் - இவர்களுக்கு சுபாச்ரயத்வமில்லையென்னுமிடத்தை, “ஹிரண்யகர்ப்போ பகவாந் வாஸவோ அத ப்ரஜாபதி:” என்று தொடங்கி, “அசுத்தாஸ்தே ஸமஸ்தாஸ்து தேவாத்யா: கர்மயோநய:” என்றும், “ஆப்ரஹ்ம ஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்வ்யவஸ்திதா: | ப்ராணின: கர்மஜநித ஸம்ஸார வசவர்த்திந:” என்றும், “கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமதங்களம் | இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ: பரா கதி:” என்றும் பராசர சௌநக சுகாதிகள் ப்ரதிபாதித்தார்கள்.
– இவர்கள் (ப்ரம்மன் முதலானோர்) தூய்மையானவர்கள் அல்லர் என்பதும், த்யானம் செய்பவர்களுக்கு இலக்காகும் தகுதி பெற்றவர்கள் அல்லர் என்பதும் கீழே உள்ள வரிகளில் கூறப்பட்டன: விஷ்ணுபுராணம் (6-7-56, 77) ஹிரண்யகர்ப்போ பகவாந் வாஸவோ அத ப்ரஜாபதி: ... அசுத்தாஸ்தே ஸமஸ்தாஸ்து தேவாத்யா: கர்மயோநய: - பகவானாகிய ப்ரம்மன், இந்த்ரன், ப்ரஜாபதிகள், தேவர்கள் ஆகியோர் பூர்வகர்ம்ம் காரணமாகப் பிறவி எடுத்தவர்கள், எனவே தூய்மை அற்றவர்களே. விஷ்ணுதர்மம் (104-23) - ஆப்ரஹ்ம ஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்வ்யவஸ்திதா: ப்ராணின: கர்மஜநித ஸம்ஸார வசவர்த்திந: - ப்ரம்மன் தொடங்கி சிறிய புல் வரை உள்ள அனைத்தும் கர்மம் காரணமாகப் பிறவி எடுத்தவர்கள்; எனவே அவர்கள் ஸம்ஸார சுழற்சிக்கு உட்பட்டவர்களே ஆவர். ஸ்ரீமத் பாகவதம் (11-19-18) - கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமதங்களம் இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ: பரா கதி: - உலக விஷயங்களில் பற்றுதல் நீங்கப் பெற்றவன், ப்ரம்மன் முதலானவர்கள் எந்தவிதமான பாவங்களையும் நீக்கவல்லவர்கள் அல்லர் என்று அறியவேண்டும்; இதனால் அவர்கள் தூய்மை அற்றவர்கள்; இப்படிப்பட்டவன் வாஸுதேவனையே தனது உயர்ந்த இலக்காகக் கொள்ளவேண்டும். இப்படியாகவே பராசரர், சௌநகர் மற்றும் சுகர் ஆகியோர் உபதேசித்தனர்.