Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ப்ரம்மன், ருத்ரன் போன்றோர் நாராயணனிடமிருந்தே ஞானம் பெறுபவர்கள்

மூலம் - இவர்கள் தங்களுக்கு அந்தராத்மாவான அவன் கொடுத்த ஞானாதிகளைக் கொண்டு அவனுக்கு ஏவல் தேவை செய்கிறார்களென்னுமிடம், “ஏதௌ விபுதச்ரேஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்ம்ருதௌ | ததாதர்சித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ” என்று சொல்லப்பட்டது.

– ப்ரம்மன் முதலானோர் தங்களுக்கு அந்தர்யாமியாக உள்ள ஸ்ரீமந் நாராயணன் அளித்த ஞானத்தைக் கைக்கொள்கின்றனர். அந்த ஞானம் மூலமே, அவனுக்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்தபடி உள்ளனர். இதனை மஹாபாரதம் சாந்திபர்வம் (350-19) - ஏதௌ விபுதச்ரேஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்ம்ருதௌ ததாதர்சித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ – எம்பெருமானின் மகிழ்வாலும், கோபத்தாலும் தோன்றியவர்களான தேவர்களில் உயர்ந்தவர்கள் (ப்ரம்மன், சிவன்), அவன் கொடுத்த அறிவு மூலம் ஸ்ருஷ்டியையும், அழித்தலையும் செய்தபடி உள்ளனர் – என்று கூறியது.