Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ப்ரம்மன், ருத்ரன் போன்றோர் நாராயணனின் மாயைக்கு உட்பட்டவர்களே

மூலம் - இவர்கள் பகவந்மாயா பரதந்த்ர்ராய் குணவச்யராய் ஞானஸங்கோச விகாஸவான்களாயி ருப்பார்களென்னுமிடம் வேதாபஹாராதி வ்ருத்தாந்தங்களிலும், “ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா தேவா மனுஷ்யா: பசவஸ்ததா | விஷ்ணுமாயா மஹாவர்த்த மோஹாந்த தமஸாவ்ருதா:”, “ப்ரஹ்மா விச்வஸ்ருஜோ தர்மா மஹாந் அவ்யக்தமேவ ச | உத்தமாம் ஸாத்த்விகீமேதாம் கதிமாஹுர்மநீஷிணா:” இத்யாதிகளிலும் ப்ரஸித்தம்.

– ப்ரம்மன், ருத்ரன் முதலானோர் நாராயணனின் மாயைக்கு வசப்பட்டவர்கள், மூன்று குணங்களின் வசப்பட்டவர்கள், இவர்களின் ஞானமானது விரிவதும் சுருங்குவதுமாகவே உள்ளது. இவை அனைத்தையும் வேதங்களைப் ப்ரம்மன் தொலைத்த நிகழ்வு மூலமும், கீழே உள்ள வரிகளின் மூலமும் அறியலாம்: விஷ்ணு புராணம் - ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா தேவா மனுஷ்யா: பசவஸ்ததா விஷ்ணுமாயா மஹாவர்த்த மோஹாந்த தமஸாவ்ருதா: - ப்ரம்மன் உள்ளிட்ட தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் ஆகிய அனைத்தும் விஷ்ணுவின் மாயை எனப்படும் இருளால் சூழப்பட்டே உள்ளனர். மநு ஸ்ம்ருதி (12-50) - ப்ரஹ்மா விச்வஸ்ருஜோ தர்மா மஹாந் அவ்யக்தமேவ ச உத்தமாம் ஸாத்த்விகீமேதாம் கதிமாஹுர்மநீஷிணா: - கடந்த பிறவியில் ஸத்வ குணம் மேலோங்கி நிற்க, பல புண்ணியங்களைச் சிலர் செய்கின்றனர்; இவர்களால் ப்ரம்மன், ஒன்பது ப்ரஜாபதிகள், தர்மதேவதை, மஹத் தேவதை, அவ்யக்த தேவதை என்னும் உயர்ந்த பிறவிகள் எடுக்கப்படுகின்றன.