Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ப்ரம்மன், ருத்ரன் போன்றோர் நாராயணனை ஆராதித்தே தங்கள் பதவிகளை அடைந்தவர்கள்

இவர்கள் கர்மவச்யராய்ச் சில கர்மவிசேஷங்களாலே ஸர்வேச்வரனை ஆராதித்துத் தத்தம் பதங்கள் பெற்றார்களென்னுமிடம், “ஸர்வே தேவா வாஸுதேவம் யஜந்தே ஸர்வே தேவா வாஸுதேவம் நமந்தே”, “ஸப்ரஹ்மகாஸ்ஸருத்ராச்ச ஸேந்த்ர தேவா மஹர்ஷய: | அர்ச்சயந்தி ஸுரச்ரேஷ்டம் தேவம் நாராயணம் ஹரிம்”, “சிந்தயந்தோ ஹி யம் நித்யம் ப்ரஹ்மே சாநாதய: ப்ரபும் | நிச்சயம் நாதிகச்சந்தி தமஸ்மி சரணம் கத:”, “பத்மே திவ்யே அர்க்கஸங்காசோ நாப்யாமுத்பாத்ய மாமபி | ப்ராஜாபத்யம் த்வயா கர்ம ஸர்வம் மயி நிவேசிதம் || ஸோ அஹம் ஸந்ந்யஸ்த பாரோ ஹி த்வாமுபாஸே ஜகத்பதிம்”, “யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ: | புனஸ்த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநித சுச்ரும”, “விச்வரூபோ மஹாதேவ: ஸர்வமேதே மஹாக்ரதௌ | ஜுஹாவ ஸர்வபூதாநி ஸ்வயமாத்மாநமாத்மநா”, “மஹாதேவ: ஸர்வமேதே மஹாத்மா ஹ்ருத்வா ஆத்மாநம் தேவதேவோ பபூவ | விச்வாந் லோகாந் வ்யாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே துதிமாந் க்ருத்திவாஸா:”, “யோ மே யதா கல்பிதவாந் பாகமஸ்மிந் மஹாக்ரதௌ | ஸ ததா யஜ்ஞபாகர்ஹோ வேதஸூத்ரே மயா க்ருத:” இத்யாதிகளிலே ப்ரஸித்தம்.

– ப்ரம்மன், ருத்ரன் முதலானோர் கர்மவசப்பட்டவர்களே ஆவார்கள். இவர்கள் ஸர்வேச்வரனான ஸ்ரீமந் நாராயணனை ஆராதனை செய்வதன் மூலமே தங்களது பதவிகளை அடைகின்றனர் என்பதைக் கீழே உள்ள பல வரிகளின் மூலம் அறியலாம்: ஸர்வே தேவா வாஸுதேவம் யஜந்தே ஸர்வே தேவா வாஸுதேவம் நமந்தே – வாஸுதேவனையே அனைத்து தேவர்களும் ஆராதனை செய்கின்றனர்; வாஸுதேவனையே அனைத்து தேவர்களும் வணங்குகின்றனர்; மஹாபாரதம் சாந்தி பர்வம் (350-30) - ஸப்ரஹ்மகாஸ்ஸருத்ராச்ச ஸேந்த்ர தேவா மஹர்ஷய: அர்ச்சயந்தி ஸுரச்ரேஷ்டம் தேவம் நாராயணம் ஹரிம் – ப்ரம்மன், ருத்ரன், இந்த்ரன், தேவர்கள், அனைத்து முனிவர்கள் ஆகியோர் தேவர்களுக்குத் தேவனாக உள்ள ஸ்ரீஹரியாகிய நாராயணனையே ஆராதனை செய்தபடி உள்ளனர். மஹாபாரதம் சாந்தி பர்வம் (210-33) - சிந்தயந்தோ ஹி யம் நித்யம் ப்ரஹ்மே சாநாதய: ப்ரபும் நிச்சயம் நாதிகச்சந்தி தமஸ்மி சரணம் கத: - ப்ரம்மன், ருத்ரன் முதலானோர் நாராயணனை எப்போதும் ஆராதனை செய்தபடி உள்ளபோதிலும், அவனது தன்மை இத்தகையது என்பதை இன்னமும் அறியாமலேயே உள்ளனர்; இப்படிப்பட்ட நாராயணனை நான் வணங்குகிறேன். இராமாயணம் உத்தரகாண்டம் (104-7, 8) - பத்மே திவ்யே அர்க்கஸங்காசோ நாப்யா முத்பாத்ய மாமபி ப்ராஜாபத்யம் த்வயா கர்ம ஸர்வம் மயி நிவேசிதம் ஸோ அஹம் ஸந்ந்யஸ்த பாரோ ஹி த்வாமுபாஸே ஜகத்பதிம் – ப்ரம்மன் கூறுவது, “உனது திருநாபியில், சூர்யன் போன்ற பிரகாசத்துடன் உண்டான தாமரையில், என்னை உண்டாக்கினாய்; ப்ரஜாபதி என்பவர் செய்யவேண்டிய அனைத்துக் கடமைகளையும் என்னிடம் வைத்தாய்; இப்படியாக பெரும் பாரத்தைக் கொண்டவனாகிய நான், அனைத்து உலகின் பதியாக உள்ள உன்னை வணங்குகிறேன். மஹாபாரதம் - யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ: புனஸ்த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநித சுச்ரும – தாமரையில் அமர்ந்துள்ளவனான ப்ரம்மன், ஆயிரம் கோடி யுகங்கள் நாராயணனை ஆராதனை செய்து, மூன்று உலகங்களையும் படைக்கும் திறமையைப் பெற்றான் என்பதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். மஹாபாரதம் சாந்தி பர்வம் (8-37) - விச்வரூபோ மஹாதேவ: ஸர்வமேதே மஹாக்ரதௌ ஜுஹாவ ஸர்வபூதாநி ஸ்வயமாத்மாநமாத்மநா – விச்வரூபன் என்னும் பெயர் கொண்ட ருத்ரன், ஸர்வமேதம் என்னும்படியான யாகத்தில் அனைத்துப் பூதங்களையும், தன்னையும் மனதால் அர்ப்பணித்தான். மஹாபாரதம் சாந்தி பர்வம் (20-12) - மஹாதேவ: ஸர்வமேதே மஹாத்மா ஹ்ருத்வா ஆத்மாநம் தேவதேவோ பபூவ விச்வாந் லோகாந் வ்யாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே துதிமாந் க்ருத்திவாஸா: - ஸர்வமேதம் என்னும் யாகத்தில் மஹாதேவன் என்னும் ருத்ரன் தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொண்டு, தேவர்களில் உயர்ந்தவன் என்னும் பெயர் அடைந்தான்; இதன் மூலம், யானையின் தோலைத் தனது உடையாகக் கொண்ட அவன், தனது ஞானம் மூலம் அனைத்து உலகங்களையும் வ்யாபித்து நின்றான்; எட்டுவிதமான மூர்த்திகளைத் தாங்கியபடி உள்ளான். மஹாபாரதம் சாந்தி பர்வம் (349-61) - யோ மே யதா கல்பிதவாந் பாகமஸ்மிந் மஹாக்ரதௌ ஸ ததா யஜ்ஞபாகர்ஹோ வேதஸூத்ரே மயா க்ருத: - இத்தகைய பெரிய யாகத்தில், எனக்கு அளிக்கப்பட வேண்டிய அவிர்பாகத்தை யார் ஒருவன் முறைப்படி அளித்தானோ, அவன் தனக்கு உரிமையான யஜ்ஞ பாகத்தைப் பெறும் உரிமை உடையவன் ஆகிறான்; இதனை நான் வேதங்களிலும், ஆபஸ்தம்ப ஸூத்ரத்திலும் கூறியுள்ளேன்.