Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
ப்ரம்மன், ருத்ரன் போன்றோர் படைக்கப்பட்டவர்களே
மூலம் - ப்ரம்மருத்ராதிகள் ஸர்வேச்வரனுக்குக் கார்யபூதரென்னுமிடம், “தத் விஸ்ருஷ்டஸ்ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே” இத்யாதிகளாலும், “ஸங்க்ஷிப்ய ச புரா லோகாந் மாயயா ஸ்வயமேவ ஹி | மஹார்ணவே சாயாந: அப்ஸு மாம் த்வம் பூர்வமஜீஜந:”, “க இதி ப்ரஹ்மணோ நாம ஈச: அஹம் ஸர்வதேஹிநாம் | ஆவாம் தவாங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேசவநாமவாந்”, “அஹம் ப்ரஸாதஜஸ்தஸ்ய கஸ்மிம்ச்சித் காரணாந்தரே | த்வம் ச ஏவ க்ரோதஜஸ்தாத் பூர்வஸர்க்கே ஸநாதநே” என்று எதிரி கையாலே விடுதீட்டானபடியே அவர்கள் தங்கள் பாசுரங்களாலும் ஸித்தம்.
– ப்ரம்மன், ருத்ரன் முதலானோர் ஸர்வேச்வரனிடமிருந்தே தோன்றியவர்கள் என்பது மநு ஸ்ம்ருதி (1-11) - தத்விஸ்ருஷ்டஸ்ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே – நாராயணனிடமிருந்து தோன்றிய அந்தப் புருஷன் உலகினரால் ப்ரம்மன் எனப்படுகிறான் – போன்ற வரிகள் மூலம் உணரலாம். அடுத்துள்ள பல வரிகளும் காண்க: உத்தரகாண்டம் (104-4) - ஸங்க்ஷிப்ய ச புரா லோகாந் மாயயா ஸ்வயமேவ ஹி மஹார்ணவே சாயாந: அப்ஸு மாம் த்வம் பூர்வமஜீஜந: - உனது ஸங்கல்பம் மூலம் அந்த உலகை அழித்து, ப்ரளயத்தின் ஸமுத்திரத்தில் சயனித்தபடி என்னைப் (ப்ரம்மன்) படைத்தாய்; ஸ்ரீஹரிவம்சம் (3-131-4) - க இதி ப்ரஹ்மணோ நாம ஈச: அஹம் ஸர்வதேஹிநாம் ஆவாம் தவாங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேசவநாமவாந் – க என்பது ப்ரம்மன், நான் (சிவன்) அனைத்து உயிர்களின் ஈசன், நாங்கள் இருவரும் உனது திருமேனியிலிருந்தே தோன்றினோம், இதனால் நீ கேசவன் எனப்படுகிறாய்; மஹாபாரதம் சாந்திபர்வம் (352-62) - அஹம் ப்ரஸாதஜஸ்தஸ்ய கஸ்மிம்ச்சித் காரணாந்தரே த்வம் ச ஏவ க்ரோதஜஸ்தாத் பூர்வஸர்க்கே ஸநாதநே – சிவனிடம் ப்ரம்மன், “எம்பெருமான் ஒரு காலகட்டத்தில் மகிழ்வுடன் இருக்க, அப்போது நான் தோன்றினேன். அது போன்று ஒரு காலகட்டத்தில் அவன் கோபத்துடன் இருந்தபோது நீ தோன்றினாய்”, என்றான். மேலே உள்ள வரிகளானவை, “பல தெய்வங்களும் தங்களுக்குத் தாங்களே எம்பெருமானால் படைக்கப்பட்டவர்கள்” என்று வாக்குமூலம் கொடுப்பதாக அமைந்துள்ளது காண்க.