Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

பல மதங்களின் கண்டன வாதங்கள்

மூலம் - அவ்விடத்தில் சேதநாசேதநங்களுடைய அத்யந்தபேதம் ப்ரமாண ஸித்தமாகையாலே எல்லாம் பரதேவதையாயிருக்கிற ப்ரஹ்மத்ரவ்யமென்கிற பக்ஷம் தடியாது. ஸ்வபாவஸித்தமான ஜீவேச்வரபேதமும் அப்படியே தேவாதிரூபரான ஜீவர்களுடைய அந்யோந்யபேதமும் ஸுக துக்காதி வ்யவஸ்தையாலே ப்ரமாணிகமாகையால் ஸர்வாந்தர்யாமி ஒருவனேயாகிலும் ப்ரஹ்ம ருத்ரேந்த்ராதி ஸர்வதேவதைகளும் ஈச்வரனோடும் தன்னில்தானும் அபிந்நர் என்கிற பக்ஷம் கூடாது.

– ப்ரமாணங்கள் மூலம் சேதனங்களும் அசேதனங்களும் வெவ்வேறு என்று தெளிவாக அறியப்படுகிறது. ஆகவே அனைத்தும் ப்ரஹ்மத்தின் அங்கம் என்னும் வாதம் ஏற்க இயலாது. இது போன்றே ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் இடையே வேறுபாடு உண்டு. மேலும், சுக துக்கங்களில் உள்ள நிலை மாறுபாடு காரணமாகவும், பல ப்ரமாணங்கள் மூலமும் தேவர்களாக உள்ள ஜீவன்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை உணரலாம். அனைத்தின் உள்ளே அந்தர்யாமியாக உள்ள ஸர்வேச்வரன் ஒருவனே என்றாலும் – ப்ரம்மன், ருத்ரன், இந்த்ரன் ஆகியவர்களுக்கும் ஈச்வரனுக்கும் பேதம் இல்லை என்பதையும், இவர்களுக்கு இடையில் (ஒருவருக்கு ஒருவர்) பேதம் இல்லை என்பதையும் ஏற்க இயலாது.