Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
பரதேவதை யார் என்று ஏன் நிர்ணயம் செய்ய வேண்டும்
மூலம் - உக்தவைதர்ம்யங்களாலே பொதுவிலே ப்ரக்ருதி – புருஷ – ஈச்வர – விவேகம் பண்ணினாலும் “ஒன்றுந்தேவும்” இத்யாதிகளிற்படியே பர தேவதா விசேஷ நிச்சமில்லாதபோது “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்” என்கிற பரமைகாந்தித்வம் கூடாமையாலும், பரமைகாந்திக்கல்லாது வ்யவதாந ரஹிதமாக மோக்ஷம் கிடையாமையாலும் ஈச்வரன் இன்ன தேவதாவிசேஷமென்று நிஷ்கர்ஷிக்க வேணும்.
– இதுவரை கூறப்பட்ட பல விவரங்கள் மூலம் அனைத்துத் தத்துவங்களும் ப்ரக்ருதி – புருஷன் – ஈச்வரன் என்று பிரிக்கப்பட்டன. இப்படிப் பிரிக்க முடிந்த ஞானம் மட்டுமே கொண்டு, இன்னதுதான் அனைத்திலும் உயர்ந்த தெய்வம் என்று திருவாய்மொழியில் (4-10-1) – ஒன்றுந்தேவும் – கூறியது போன்று, நம்மால் உணர இயலாது. இவ்விதம், இன்னதுதான் உயர்ந்த பரதெய்வம் என்று முடிவு செய்ய, திருவாய்மொழி (4-6-10) - உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால் – என்னும் ஞானம் அவசியமாகும். இப்படிப்பட்ட பரமைகாந்தி நிலையில் உள்ளவர்களுக்கு அல்லாது, வேறு யாருக்கும் மோக்ஷமானது மிகவும் விரைவாகக் கிட்டுவதில்லை. ஆகவே இன்னதுதான் பரதெய்வம் என்று நிரூபிப்பது அவசியம் ஆகும்.