Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 53)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
ஆவாப உத்வாபதஸ்ஸ்யு: கதி கதி கவிதீ சித்ரவத்தத்ததர்தேஷு ஆனந்த்யாதஸ்திநாஸ்த்யோரநவதிகுஹநா யுக்திகாந்தா: க்ருதாந்தா: தத்த்வாலோகஸ்து லோப்தும் ப்ரபவதி ஸஹஸா நிஸ்ஸமஸ்தாந் ஸமஸ்தாந் பும்ஸ்த்வே தத்வேந த்ருஷ்டே புனரபி ந கலு ப்ராணிதா ஸ்தாணுதாதி:
– பலவிதமான தத்வங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றில் இல்லாதது மற்றொன்றில் உள்ளது, மற்றொன்றில் உள்ளது வேறொன்றில் நீக்கப்படுவதுமாக பல உள்ளன. இவை ஒவ்வொன்றும் தத்தமது வாதங்களால் காண்பதற்கு அழகாகவே உள்ளன. இவற்றில் ”உள்ளது”, “இல்லை” என்ற தவறான வாதங்கள் எண்ணற்று உள்ளன. கவிஞர்களின் எல்லையில்லாத சிந்தனை போன்று, இது போன்ற தத்வங்கள் எண்ணற்று உள்ளன. எத்தனை இருந்தாலும் உண்மையைப் பற்றிய அறிவானது, இவை அனைத்தையும், இருந்த இடம் தெரியாமல் போக்கும் வலிமை பெற்றதாகும். தனக்கு முன்பாக உள்ள பொருளை மனிதன் என்று அறிந்த பின்னர், அந்தப் பொருள் மிருகமா, கட்டையா, புருஷனா என்ற சந்தேகம் நீங்கிவிடும். இது போன்றே, ஸ்ரீமந் நாராயணனே பரதெய்வம் என்று அறிந்த பின்னர், அப்படிப்பட்ட பரதெய்வம் என்பது ருத்ரனா, ப்ரம்மனா என்ற சந்தேகம் அடியுடன் நீங்கிவிடுகிறது.