Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 52)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

தேற இயம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும், வினை உடம்பில் கூறுபடும் கொடுமோகமும் தான் இறையாம் குறிப்பும் மாறநினைந்து அருளால் மறை நூல் தந்த வாதியரே.

– வேதங்களின் சாரத்தை நமக்கு அளித்த ஆசார்யர்கள், நம் மீது கொண்ட அளவற்ற கருணையால் செய்தது என்ன – கர்மத்தின் தொடர்பால் உண்டாகிய இந்த உடலில் ஏற்படுகின்ற மோகம் (உடலே ஆத்மா என்னும் எண்ணம்), சுதந்திரமானவன் என்னும் எண்ணம் ஆகியவற்றை நீக்கத் திருவுள்ளம் கொண்டனர். இதனால் சேதனம், அசேதனம், ஈச்வரன் ஆகிய மூன்று தத்வங்கள் குறித்தும், இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும், நமக்குச் சிறிதும் ஐயம் ஏற்படாமல் உபதேசித்தனர்.