Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 48)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
திவ்யதம்பதிகளின் செயல்கள்
மூலம் - இவ்விடத்தில் ஸர்வஜ்ஞனாகவும் வேண்டா. அத்யந்தானுபயுக்தங்களிற் போலே ஸ்வல்போபயுக்தங்களானவற்றில் அபிஸந்தி பண்ணவும் வேண்டா. அபரிச்சேத்யமான கடலிலே படகோடுவார் வழி முதலாக வேண்டுவன தெளியுமாப் போலே இவ்வளவு விவேகிக்கை அவச்யாபேக்ஷிதம். இது ப்ரதிஷ்டிதமாகைக்காக இவற்றின் விரிவுகள் எண்ணுகிறது.
– ஆயினும் நாம் அனைத்தையும் அறியவேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தேவையற்ற விஷயங்கள் குறித்து மிகுந்த அறிவு உண்டாக வேண்டுமென்று சிரமப்பட வேண்டியதில்லை. ஒரு பெரிய கடலில் படகைச் செலுத்துபவனுக்கு, தன்னுடைய படகு செல்லவேண்டிய வழி அறிந்தாலே போதுமானது. இது போன்று நமக்கு அவசியமானதை அறிந்தாலே போதுமானது. இந்த தத்வங்களைக் குறித்து உறுதியாக அறிந்து கொள்ள, விரிவாக்க் கற்பது அவசியமாகிறது.