Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 46)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

ஈச்வரன் பெரியபிராட்டியைப் பிரியாமல் உள்ளான்

இவ்வீச்வரன் “நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ” இத்யாதிகளிற்படியே ஸர்வாவஸ்தையிலும் ஸபத்நீகனாய்க் கொண்டேயிருக்கு மென்னுமிடத்தை “தத்த்வேந ய:”, “மாதா பிதா” என்கிற ச்லோகங்களிலே உபகார விசேஷத்தாலே ஸாதரமாக விசேஷித்துச் சொல்லப்பட்ட பராசர பராங்குச ப்ரபந்தங்களிலே தெளிந்து கொள்வது.

– ஈச்வரன் எப்போதும் தன்னுடைய பத்நியாகிய பெரியபிராட்டியுடன் கூடியவனாகவே உள்ளான் என்பதை விஷ்ணுபுராணம் (1-22-53) - நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ – உலகின் தாயான மஹாலக்ஷ்மி எப்போதும் விஷ்ணுவைப் பிரியாமல் உள்ளாள் – போன்ற வரிகள் மூலமாக அறியலாம். இந்தக் கருத்தை பராசரர் மற்றும் பராங்குசர் (நம்மாழ்வார்) ஆகியோரின் அருளிச்செயல்கள் மூலமாக அறியலாம். இதனை ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் ச்லோகங்கள் 4, 5 மூலம் அறியலாம்.