Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 45)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

ஈச்வரனின் செயல்கள்

மூலம் - இப்படியிருக்கிற ஈச்வரன் தன் ஆனந்தத்துக்குப் பரீவாஹமாகப் பண்ணும் வ்யாபாரங்கள் ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார மோக்ஷ ப்ரதத்வாதிகள்.

மோக்ஷத்தை அளிக்கவல்ல ஈச்வரனின் செயல்பாடுகள் என்பது அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, ஸம்ஹாரம் செய்வது ஆகும். இதனை அவன் தன்னுடைய ஆனந்தம் காரணமாகவே செய்கிறான்.