Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 42)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
அந்தர்யாமி ரூபம் குறித்த விளக்கம்
மூலம் - ஸர்வருடையவும் ஹ்ருதயங்களிலே ஸூக்ஷ்மமாயிருப்பதொரு ரூபவிசேஷத்தைக் கொண்டு நிற்கிற நிலை அந்தர்யாம்யவதாரம். இது ஸர்வாந்தர்யாமியான திவ்யாத்மஸ்வரூபத்தை அனுஸந்திக்க இழிவார்க்குத் துறையாக, “அஷ்டாங்க யோக ஸித்தாநாம் ஹ்ருத்யாக நிரதாத்மநாம் | யோகிநாம் அதிகாரஸ் ஸ்யாத் ஏகஸ்மிந் ஹ்ருதயேசயே”, இத்யாதிகளிலே சொல்லுகையாலே அந்தர்யாமிரூபமென்று சொல்லப்பட்டது.
ஜீவன்களின் இதயத்திலே ஸூக்ஷ்ம ரூபத்தில் ஈச்வரன் உள்ளான். இது அந்தர்யாமி ரூபமாகும். இந்த நிலையானது அந்தர்யாமியாக, ஸர்வேச்வரனின் திவ்ய மங்கள ரூபத்தைத் த்யானிக்க முயல்பவர்களுக்கு உரியதாகும். இதனை ஸாத்வத ஸம்ஹிதை, “அஷ்டாங்க யோக ஸித்தாநாம் ஹ்ருத்யாக நிரதாத்மநாம் யோகிநாமதிகாரஸ்ஸ்யாத் ஏகஸ்மிந் ஹ்ருதயேசயே - அஷ்டாங்க யோகத்தை அடைந்து, தங்கள் இதயத்தில் அந்தர்யாமியாக உள்ள ஸர்வேச்வரனைத் த்யானிக்க முயலும் யோகிகள் அந்தர்யாமியாக உள்ள அந்த ரூபத்தை உபாஸிக்கும் தகுதி பெற்றவர்கள்”, என்றது. இப்படியாக அந்தர்யாமி ரூபம் கூறப்பட்டது.