Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 41)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
அர்ச்சாவதாரம் குறித்த விளக்கம்
மூலம் - பர வ்யூஹாதி ரூபங்கள் தாமே ஆச்ரிதர்க்காக அவர்கள் அபேக்ஷித்தபடியிலே “பிம்பாக்ருத்யாத்மநா பிம்பே ஸமாகத்யாவதிஷ்டதே” என்கிறபடியே நிற்கிற நிலை அர்ச்சாவதாரம்.
பர, வ்யூஹ மற்றும் விபவ ரூபங்கள், தன்னை அண்டிய அடியார்களுக்காக, ஸாத்வத ஸம்ஹிதை கூறுவது போன்று, “பிம்பாக்ருத்யாத்மநா பிம்பே ஸமாகத்யாவதிஷ்டதே - பிம்பத்தில் எழுந்தருளி பிம்பம் மற்றும் திருமேனி எனப் பிரிக்க இயலாதபடி”, விக்ரஹமாக உள்ளன. இவை அர்ச்சாவதாரமாகும்.