Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 39)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
பர மற்றும் வ்யூஹ ரூபம் குறித்த விளக்கம்
மூலம் - வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்திரங்கள் சொல்லும். நாலு வ்யூஹமுண்டாயிருக்க வ்யூஹ வாஸுதேவ ரூபத்துக்குப் பரரூபத்திற்காட்டில் அநுஸந்தேய குணபேதமில்லாமையாலே த்ரிவ்யூஹமென்கிறது. இப்பக்ஷத்தை, “குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதமதர மூர்த்தஸ்தவ பபௌ | ததாஸ்திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிபிரபு:” என்கிற ச்லோகத்தில் ஸங்க்ரஹித்தார்கள். இப்பரவ்யூஹங்களில் குண க்ரியா விபவங்கள், ஷாட்குண்யாத் வாஸுதேவ: பர இதி பகவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர்ஷண: த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ரம் ஐச்வர்ய வீர்யாத் ப்ரத்யும்ந: ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந் சக்தி தேஜோ நிருத்த: பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப்பட்டன. ஜாக்ரதாதி பத பேதங்களிலுள்ள விசேஷங்களெல்லாம், “ஜாக்ரத் ஸ்வப்நாத்யலஸ துரீய ப்ராய த்யாத்ருக்ரமவத் உபாஸ்ய: | ஸ்வாமிந் தத் தத் குண பரிபர்ஹ: சாதுர்வ்யூஹும் வஹஸி சதுர்த்தா” என்று ஸங்க்ருஹீதங்களாயிற்று. கேசவாதிகளான பன்னிரண்டு ரூபங்களும் வ்யூஹாந்தரங்கள்.
சாஸ்த்ரங்கள் வ்யூஹங்களானவை நான்கு என்றும், மூன்று என்றும் கூறுகின்றன. நான்காகக் கூறப்படும் இடங்களில் வாஸுதேவன் அவற்றுள் ஒருவன் என்று கூறுவதுண்டு. இப்படிக் கொள்ளும்போது, வ்யூஹ வாஸுதேவனுக்கும், பரவாஸுதேவனுக்கும் த்யானிக்கத்தகுந்த குணங்களில் பேதம் இல்லை என்பதால், இரண்டும் ஒன்றே எனக் கொண்டு, வ்யூஹம் என்பது மூன்று எனலாம். வ்யூஹங்கள் மூன்று எனக் கூறுபவர்கள் கீழே உள்ள ஸ்ரீவரதராஜ ஸ்தவ (16) - குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதமதர மூர்த்தஸ்தவ பபௌ | ததாஸ்திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிபிரபு: - வரதனே! உன்னுடைய பரவாஸுதேவ ரூபம் என்பது ஆறு குணங்களால் விளங்கியது, அதன் பின்னர் உண்டான மூன்று வ்யூஹுங்கள் (ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன்) இந்த ஆறு குணங்களிலிருந்து இரண்டிரண்டு குணங்களை எடுத்துக் கொண்டன – என்னும் ச்லோகத்தின் மூலம் இவ்விதம் கூறுகின்றனர். இத்தகைய பர மற்றும் வ்யூஹங்களின் குணங்களைக் கீழே உள்ள ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் (2-39) - ஷாட்குண்யாத் வாஸுதேவ: பர இதி பகவாந் முக்தபோக்யோ பலாட்யாத் | போதாத் ஸங்கர்ஷண: த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ரம் ஐச்வர்ய வீர்யாத் | ப்ரத்யும்ந: ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந் சக்தி தேஜோ நிருத்த: | பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ – ஸ்ரீரங்கநாதனே! ஆறு குணங்களுடன் கூடிய பரவாஸுதேவன் என நீயே உள்ளாய். இப்படியாக உள்ள நீ முக்தர்களால் அனுபவிக்கப்படுகிறாய். ஸங்கர்ஷணனாக பலம், ஞானம் கொண்டு இந்த உலகை ஸம்ஹாரம் செய்கிறாய். ப்ரத்யும்நனாக ஐச்வர்யம் மற்றும் வீர்யம் கொண்டு உலகைப் படைத்து, தர்மத்தை நிலைநிறுத்துகிறாய். அநிருத்தனாக சக்தி மற்றும் தேஜஸ் கொண்டு உலகைக் காப்பாற்றி, தத்துவங்களை விளக்கியபடி உள்ளாய் – என்பதில் காணலாம். விழிப்பு நிலை முதலான பல்வேறு நிலைகளின் வேறுபாடுகள் கீழே உள்ள ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் (2-40) - ஜாக்ரத் ஸ்வப்நாத்யலஸ துரீய ப்ராய த்யாத்ருக்ரமவத் உபாஸ்ய: | ஸ்வாமிந் தத் தத் குண பரிபர்ஹ: சாதுர்வ்யூஹும் வஹஸி சதுர்த்தா - ஸ்ரீரங்கநாதா! உன்னைத் த்யானிப்பவர்களில் ஒரு சிலர் விழிப்பு நிலையில் உள்ளனர் (இவர்களின் புலன்கள் இயங்கியபடி உள்ளன), ஒரு சிலர் கனவு நிலையில் உள்ளனர் (இவர்களின் புலன்கள் உறங்கியபோதிலும் மனம் விழித்துக் கொண்டுள்ளது), ஒரு சிலர் கனவுகள் அற்ற ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் (இவர்களின் புலன்கள், மனம் போன்ற எதுவும் இயங்குவதில்லை, மூச்சு மட்டுமே சீராக இருக்கும்), மேலும் சிலர் மயக்க நிலையில் உள்ளனர் (இவர்களின் மூச்சும் சீராக இருப்பதில்லை), இப்படியாக நீயும் உன்னை நான்கு ரூபங்களாகப் பிரித்துக் கொண்டு, அந்தந்த ரூபத்திற்கு ஏற்ற குணங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டுள்ளாய் – என்னும் ச்லோகத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டது. கேசவன் முதலான பன்னிரண்டும் வ்யூஹுத்திலிருந்து வெளிப்படும் மற்ற ரூபங்கள் ஆகும்.