Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 38)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

பரம், வ்யூஹம் முதலான ஐந்து ரூபங்கள்

மூலம் - பர வ்யூஹாதி விபவங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோ ரூபங்களை அனுஸந்திப்பார்க்கு ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக வத்தனை. ஒளபனிஷத் வித்யாவிசேஷங்கள்தோறும் அனுஸந்தேய குண விசேஷங்கள் நியதங்களானாற்போலே பகவச்சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷானுஸந்தானத்துக்கும் குணவிசேஷங்கள் நியதங்கள். அவ்விடத்தில் பரரூபத்தில் ஞானாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்.

இந்தக் குணங்களில் சில பர ரூபத்திலும், சில வ்யூஹ ரூபத்திலும், சில விபவ ரூபத்திலும் மட்டுமே வெளிப்படும் என்று கூறுவது ஏன் என்றால், எந்த ரூபத்தை உபாஸித்தாலும், அவர்களுக்கு அவன் தனது குணங்களைக் காட்டித் தருகிறான் என்று விளக்கவே ஆகும். உபநிஷத்தில் குறிப்பிட்ட வித்யை மூலம் ப்ரஹ்ம உபாஸனை செய்வது கூறப்படுவது போன்று, பாஞ்சராத்ர ஆகமத்தில், குறிப்பிட்ட பகவத் ரூபங்களில் குறிப்பிட்ட குணங்களை உபாஸிப்பது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து ரூபங்களிலும் மேற்கூறிய ஆறு குணங்களும் வெளிப்படும்.