Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 37)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தத்வம் – 3 – ஈச்வரன் - ஈச்வரனுடைய ஸ்வரூபத்தை நிரூபிக்கக்கூடிய சிறப்புகள்
மூலம் - மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளுமெல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக்கும். இக்குணங்களில் ஞான பல ஐச்வர்ய வீர்யம் சக்தி தேஜஸ்ஸுக்களென்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும். ஸெளசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸெளலப்யோபயுக்தங்களாயிருக்கும். இக்குணங்களெல்லாம் ஸர்வ காலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும்.
அவனுடைய மற்ற குணங்கள், அவனுடைய திவ்யமங்கள விக்ரஹம் முதலானவை அவனது ஸ்வரூபத்தை நிரூபிப்பவையாக உள்ளன. இவற்றில் ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி மற்றும் தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள், இவனே பரத்வம் என்பதை பறைசாற்றும்படி உள்ளன. ஸெளசீல்யம், வாத்ஸல்யம் முதலானவை இவன் அனைவராலும் எளிதில் அணுகக்கூடியவன் என்பதை விளக்கும். இந்தக் குணங்கள் அனைத்தும் அவனது ஸ்வரூபத்தின் தன்மைகளாக எப்போதும், எந்தக் காலத்திலும் உள்ளன.