Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 34)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

வஸ்துக்களுடைய ஸ்வரூபம், ஸ்திதி, ப்ரவ்ருதி ஈச்வரனுடைய வசப்பட்டவை

மூலம் - இப்பதார்த்தங்கள் எல்லாவற்றினுடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்கள் ஈச்வரனுக்கு ஸ்வாதீநங்களாயிருக்கையாவது ஈச்வர ஸத்தையையும் ஈச்வரேச்சையையு மொழிய இவற்றுக்கு ஸத்தாதிகள் கூடாதொழிகை.

இந்த அனைத்து வஸ்துக்களின் ஸ்வரூபம் (தன்மை), ஸ்திதி (இருப்பு) மற்றும் ப்ரவ்ருத்தி (செயல்பாடு) ஆகிய மூன்றும் ஈச்வரனை நம்பியே உள்ளன. இதன் காரணம் - அவனுடைய இருப்பு இல்லாமல் இவை இல்லை, அவனுடைய விருப்பம் இல்லாமல் இவை இல்லை என்பதால் ஆகும்.