Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 33)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

வஸ்துக்களின் நித்யம் மற்றும் அநித்யம் என்னும் வேறுபாடு

மூலம் - இத்த்ரவ்யங்களெல்லாம் ஸ்வரூபேண நித்யங்களாயிருக்கும் நாமாந்தரபஜநார்ஹாவஸ்தா விசேஷ விசிஷ்டதையையிட்டுச் சிலவற்றை அநித்யங்க ளென்கிறது. அழிந்ததோடு ஸஜாதீயங்களான அவஸ்தாந்தரங்கள் மேலும் முழுக்க வருகையாலே ப்ரவாஹ நித்யங்களென்று சொல்லுகிறது.

இந்த அனைத்து வஸ்துக்களும் அதன் ஸ்வரூபத்தினால் என்றும் இருக்கக்கூடியவையே ஆகும். இவை தங்களது நிலையை அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன என்பதால், இவை தாற்காலிகமானவை என்றும் அழியக்கூடியவை என்றும் கூறப்படுகின்றன (நிலையை மாற்றுதல் என்றால் - பனிக்கட்டி நீராகுதல், நீர் ஆவியாதல் போன்றவை). இதனால் இவை புதுப்பெயர்களை எடுத்துக் கொள்கின்றன. புதிய நிலைகள் என்பவை, பழைய நிலைகள் அழிந்தவுடன் இடைவெளி இன்றித் தொடர்வதால், இவை நித்யம் என்றே கொள்ளப்படுகின்றன.