Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 32)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
காலத்தின் ஸ்வரூப, ஸ்திதி, ப்ரவ்ருத்தி பேதங்கள்
மூலம் - காலத்துக்கு ஸ்வரூபபேதம் ஜடமாய் விபுவாயிருக்கை. இதன் ஸ்திதி காலாவச்சேதமில்லாமையாலே நித்யையாயிருக்கும். இதின் ப்ரவ்ருத்திபேதம் கலாகாஷ்டாதி விபாகத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபகரணமாயிருக்கிறபடியிலே கண்டு கொள்வது.
காலத்தின் ஸ்வரூபம் என்பது தானே வெளிப்படாமல், எங்கும் பரவியதாய் இருப்பதாகும். காலத்தால் அளவுபடாத காரணத்தினால், என்றும் இருக்கும் தன்மையானது இதன் ஸ்திதி ஆகும். இதன் செயல்பாடு என்பது ஸ்ருஷ்டிக்கு உதவியாக இருத்தல், கலா (ஒரு முஹூர்த்தத்தின் 1/30 பகுதி), காஷ்டை (கலா என்பதின் 1/30 பகுதி) போன்றவையாக இருத்தல் முதலானவையாகும்.