Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 22)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
ப்ரக்ருதி, காலம், சுத்தஸத்வம்
மூலம் - த்ரிவிதாசேதநங்களென்றெடுத்தவற்றில் ப்ரக்ருதியும் காலமும் ஜடங்கள். சுத்தஸத்வமான த்ரவ்யத்தையும் ஜடமென்று சிலர் சொல்லுவார்கள். ஜடத்வமாவது ஸ்வயம்ப்ரகாசமன்றிக்கேயிருக்கை. பகவச்சாஸ்த்ராதி பராமர்சம் பண்ணினவர்கள் ஞானாத்மகத்வம் சாஸ்த்ர ஸித்தமாகையாலே, சுத்தஸத்வ த்ரயத்தை ஸ்வயம்ப்ரகாசமென்பார்கள்.
மூன்று வகையான அசேதங்களில் ப்ரக்ருதியும், காலமும் ஜடப்பொருள்கள் ஆகும். ஒரு சிலர் சுத்தஸத்வத்தையும் ஜடப்பொருள் என்று கூறுவதுண்டு; ஜடப்பொருள் என்றால் தன்னைத்தானே வெளிப்படுத்த இயலாத பொருள் ஆகும். பாஞ்சராத்ரம் முதலான ஆகமங்களை ஆராய்ந்து கற்றவர்கள், “சாஸ்த்ரங்களில் கூறப்பட்டபடி, சுத்தஸத்வம் என்பது ஞானம் பொருந்தியதாக உள்ளதால், ஜடம் அல்ல. தானாகவே வெளிப்படக்கூடியது”, என்பார்கள் (சுத்தஸத்வம் என்பது முழுவதும் ஸத்வமயமானது. ஸ்ரீவைகுண்டத்தில் இது மட்டுமே உள்ளது. எம்பெருமான், பெரியபிராட்டி ஆகியோரின் திருமேனிகள் சுத்தஸத்வத்தால் ஆனவை என்றே அறியப்படுகிறது).